தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

சுதந்திர கட்சி வேட்பாளர் பட்டியலில் மகிந்தவிற்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

வெலிக்கடை சிறைச்சாலை மோதல்! நேரில் கண்டவர் சாட்சி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 06:41.32 AM GMT ]
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மோதல் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய கைதியான சுதேஷ் நந்திமால் டி சில்வா என்ற நபரே நேற்றைய தினம் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியானதுடன், 40ற்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் காயமடைந்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலை ஏற்பட்ட மோதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட மற்றும் தொழிலுறவுகள் துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 06:25.49 AM GMT ]
அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்து நியாயத்தை நிலைநாட்டும் வரையில் 100 நாள் புரட்சி தொடரும் என அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யக் கூடிய வல்லமை கிடையாது.
ஜனாதிபதியின் ஏதேச்சதிகார அதிகாரங்கள் ரத்து செய்தல் மற்றும் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் ஆகிய காரணிகளுக்காகவே மக்கள் வாக்களித்தனர்.
தற்போது மஹிந்த ராஜபக்ச குடும்பத்திடமிருந்து சுதந்திரக் கட்சி விடுவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருக்கும் கள்வர்களை விரட்டியடித்து கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும் தற்போது மறுசீரமைக்க வேண்டும். சரியான அரசியல் என்ன என்பதனை மக்களுக்கு காண்பிக்க வேண்டியது அவசியம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறிக்கொள்ள வேண்டும். பழைய பாதையில் செல்வதில் பயனில்லை. சிங்கள மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது.
நாட்டுக்கு பொருத்தமான ஓர் அரசாங்கத்தை நாம் கட்டியெழுப்பிக் கொள்ள வேண்டிது அவசியமானது. விமர்சனங்களினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்பி விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.திசாநாயக்க மீண்டும் ஐ.தே.கவில் இணைய முயற்சி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 06:52.56 AM GMT ]
முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கான விண்ணப்பித்துள்ளார் என உட்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.
எப்படியிருப்பினும் குறித்த விண்ணப்பத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருணையும் காட்டவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொண்டிருந்த ஒருவர் மூலமே இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நிறைவேற்று குழு கூட்டத்தில் எஸ்.பி.திசாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்ரம கெசினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கரை சந்தித்து, கெசினோ திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்குமாறும் பணம் கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கான சாட்சிகள் தன்னிடம் உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி வேட்பாளர் பட்டியலில் மகிந்தவிற்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 06:53.25 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பாளராக களம் இறங்க இடமளிக்க முடியாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நிகழ்வில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவு வழங்கியவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp0G.html

Geen opmerkingen:

Een reactie posten