தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

காணாமற் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை 18ம் திகதி ஜனாதிபதியிடம்

முன்னாள் கடற்படைத் தளபதி கப்பக்குழு தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை!– கடற்படை அதிகாரி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 01:55.39 AM GMT ]
முன்னாள் கடற்படைத் தளபதி கப்பக்குழு முறைப்பாடு செய்யவில்லை என உயர் கடற்படை அதிகாரியொருவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் அண்மையில் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி நேவி சம்பத் என்பவர் பற்றியே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
லெப்டினன் கமான்டர் எம்.ஏ.டிஎன் சம்பத் எனப்படும் சம்பத் முணசிங்க அல்லது நேவி சம்பத் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கடற்படை பேச்சாளர் கே.பி. தஸாநாயக்க வழி நடத்திய கும்பல் ஒன்று இளைஞர்ளை கடத்தி கப்பம் பெற்றுக் கொண்டு, அவர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அண்மையில் இது பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
எனினும் குறித்த பேச்சாளர் கப்பக்குழுவினை வழிநடத்தியதாக தாம் கூறவில்லை எனவும், கப்பக் குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ கடமைகளில் பொறுப்பதிகாரியாக கே.பி. தஸாநாயக்க கடமையாற்றினார் என்றே தாம் கூறியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
கப்பக்குழு மற்றும் கொலைகள் தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ராஜித சேனாரட்ன கோரிக்கை
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 02:03.48 AM GMT ]
“எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்” என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் எனக்கு எதிராக, ஜயந்த சமரவீரவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முடிந்தளவு விரைவில் விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளேன்.
இந்த முறைப்பாடு தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்

ஹெலிகொப்டர் வாக்குமூலத்துக்காக யோசித்தவுக்கு அழைப்பு
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 03:29.51 AM GMT ]
கடந்த ஜனவரி 13ஆம் திகதியன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள அரச களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியரக ஹெலிகொப்டர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது
வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணத்துக்கு சொந்தமானது.
எனினும் யோசித்த கோரியமையால் அதனை தாம் அவருக்கு வழங்கியதாக சந்திரன் ரட்ணம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 03:39.19 AM GMT ]
இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்து மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் பதினைந்து பேர் நீண்ட காலமாக மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் ஊடாக இந்த விடயம் குறித்து பேசப்படும். இந்தியாவைப் போன்று சுலபமாக மியன்மாரில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.
இராஜதந்திர ரீதியில் அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும் என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா துப்பாக்கிசூட்டில் குடும்பஸ்தர் பலி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 04:34.37 AM GMT ]
வவுனியா மகாரம்பைக்குளம் பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர்   உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டி.56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்தவர் 45 வயதுடைய வடிவேலழகன் எனப்படும் உணவு விடுதி உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய ஔடத கொள்கைக்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 04:32.11 AM GMT ]
தேசிய ஔடத கொள்கைக்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரி ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஔடத கொள்கைக்கமைவாக மருந்து, வைத்திய உபகரணங்கள் மற்றும் உற்பத்திகள் பதிவு செய்தல்- அனுமதிபத்திரம் பெற்றுக்கொடுத்தல், இறக்குமதி செய்தல் - வைத்திய உபகரண உற்பத்தி இரசாயன பரிசோதனைகள் செய்தல்- கட்டுப்படுத்தல் உட்பட அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறக்கூடிய தேசிய ஔடத அதிகாரசபை அமைத்தல் மற்றும் ஒளடத கட்டுப்பாட்டுப் பிரிவு, வைத்திய உபகரணங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் இவ்வதிகாரசபையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபை அமைப்பதற்கான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்கான குழுவை அமைப்பதற்காக 1980ம் ஆண்டு இல 27 வாசனைத் திரவியங்கள், உபகரணங்கள் மற்றும் ஔடத சட்டத்தை நீக்குவதற்காகவும் அது தொடர்பான காரணங்களுக்கான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்குமானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது தேசிய ஔடத சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது முடியாமல் போனதினால் புதிய அரசினூடாக அக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் விவாதம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றியுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் விவாத்தில் பங்கேற்பதும் இதுவே முதல் முறையாகும். தேசிய ஔடதங்கள் அதிகார சபை சட்ட மூலத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சட்டமூலத்தை சமர்ப்பித்ததுடன் ஜனாதிபதி விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஔடதங்கள் சம்பந்தமான சட்டமூலம் காணாமல் போயிருந்தமை குறித்தும் ஜனாதிபதி இதன் போது தகவல்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmpzA.html

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டுபட்டால் அனுகூலம் எங்களுக்கே: பிரதமர்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 05:16.03 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டுபடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுகூலம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நுகேகொட கூட்டத்திற்கு  வருகை தந்தவர்கள் திருடர்களே என கூறியுள்ளார்.
நுகேகொட கூட்டத்திற்கு வந்தவர்கள் மகிந்தவின் திருடர்கள் சிலரே. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி துண்டு துண்டாக பிரிவது ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் அனுகூலமான ஒரு விடயமாகும்.
நாங்கள் ஏனோதானோ என்று திருடர்களை பிடித்துக்கொள்ள மாட்டோம். வாய் மூலமே காலத்தை ஓட்டுபவர்களே அதிகம். நாங்கள் அவ்வாறான திருடர்களை நிச்சயமாக கைது செய்வோம்.
மகிந்த, வீரவன்சவின் மனைவியை பார்க்க சென்றிருந்த போது, தற்போதைய வேலைகளை பாருங்கள் இது ஒரு பழிவாங்கும் அரசாங்கம் என்று கூறியுள்ளார். தன்னால் எப்படி இவ்வாறான ஒரு விடயத்தை கூறமுடிந்ததென எனக்கு புரியவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை 18ம் திகதி ஜனாதிபதியிடம்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 06:24.23 AM GMT ]
காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளின் முழுமையான அறிக்கையை கூடிய விரைவில் கையளிப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் இரண்டாயிரத்து 350க்கும் அதிகமானவர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp0B.html

Geen opmerkingen:

Een reactie posten