[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 07:00.58 AM GMT ]
நீதியமைச்சரிடம் பிரதமர் விளக்கம் கோரியமை குறித்து பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளளது.
எவன் காட் நிறுவனத்தின் தலைவரது கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பின்னர் பிரதமர், நீதியமைசரை அழைத்து அது குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.
சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உழைக்கும் அனைவரும் ஊழல், மோசடிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நல்லாட்சியை கட்டியெழுப்பவும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளை முன்னெடுப்பதையோ தவிர்க்குமாறு பிரதமர், நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எவன் காட் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றதாகவும் நடத்துமாறும் சட்டவிரோத செயல்கள் நடந்திருந்தால், அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை உடனடியாக சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி குருகுல பிள்ளைகளின் மாசிமாத பிறந்தநாள் நிகழ்வு!
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 07:09.12 AM GMT ]
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா பா.உறுப்பினர் சி.சிறீதரன்,ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபர் பொன்.நித்தியானந்தன் உட்பட பெரியார்கள், குருகுல இல்ல சிறார்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 07:38.22 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கொண்டு செல்லவிடாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறுப்பினர்கள் சதி செய்வார்கள். அதுமாத்திரமின்றி உட்கட்சி பூசல்களும் வெடிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் நாங்கள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். வேலைவாய்ப்புக்களின் போது கூட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து உடனடியாக வெளியேறும்.
தற்போது கிழக்கு மாகாண சபையில் பல கட்சி ஆட்சி மலர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த இணக்க ஆட்சி நிலைக்க வேண்டுமானால், மாகாண சபையிலுள்ள எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் முழுமையாக இணைய வேண்டும். இருவர் மாத்திரமே இணைந்து அமைச்சராகியிருக்கிறார். இல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு குழப்புவார்கள்.
கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைப் போலன்றி மூன்று இனங்களும் வாழும் மாகாணம்.
இந்த மாகாணத்தில் இவ்வாறானதொரு ஆட்சி நடப்பதே சிறப்பானதாகும். இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது என மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp1A.html
Geen opmerkingen:
Een reactie posten