தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

நரேந்திர மோடியின் வருகை யாருக்கு நன்மை?

அடுத்த சில நாட்களில் மேலும் சிலர் சட்டத்தின் பிடிக்குள்: ஜோன் அமரதுங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:57.00 PM GMT ]
எந்த மட்டத்திலான அரசியல்வாதிகளாக இருந்தாலும் பாரவாயில்லை, சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில் மேலும் சிலரை சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்த பிரதேசத்தில் பொலிஸ் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் நிர்வாகம் செய்யவில்லை. வேறு நபர்களே பெலிஸாரை கட்டுப்படுத்தினர்.
நாம் பேசும் பொலிஸாரின் புகழ், கௌரவம் என்பன ஒரு புறம் ஒதுக்கி தள்ளப்பட்டிருந்தன.
பொலிஸாரை அரசியலுடன் சம்பந்தப்படுத்தி கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியும் பிரதமரும் தயவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை அச்சொட்டாக கடைபிடிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். பொலிஸாருக்கு கடந்த காலத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்பட்டது.
இராணுவத்திற்கு இருந்த மதிப்பு பொலிஸாருக்கு இருக்கவில்லை. இதனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கௌவரத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்போம்.
கூடிய விரைவில் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டு பொலிஸ் ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்து இழந்த கௌரவத்தை பெற்றுக்கொடுப்போம். அதற்கு பிறகு என்னால் கூட பொலிஸாருக்கு உத்தரவுகளை வழங்க முடியாது.
இது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு வேலையாகும். அத்துடன் பிரஜைகள் பொலிஸை ஏற்படுத்தி, சிவில் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.


நரேந்திர மோடியின் வருகை யாருக்கு நன்மை?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 02:04.30 PM GMT ]
கிட்­டத்­தட்ட 28 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், இந்­தியப் பிர­தமர் ஒருவர் இந்­த­ வாரம் இலங்­கைக்கு அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வரும் 13ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியை கொழும்­பிலும், நாட்டின் பிற பகு­தி­க­ளிலும் கழிப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டி­ருக்­கிறார்.
1987ம் ஆண்டு ஜூலை மாத இறு­தியில் இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த, ராஜீவ்­ காந்தி தான், இலங்­கைக்கு கடை­சி­யாக அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொண்ட இந்­தியப் பிர­தமர். அவ­ருக்குப் பின்னர், இந்த 28 ஆண்டு கால இடை­வெ­ளியில், இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த வி.பி.சிங், சந்­தி­ர­சேகர், தேவ­கௌடா, ஐ.கே.குஜ்ரால், நர­சிம்­மராவ், அடல் பிகாரி வாஜ்பாய், மன்­மோகன் சிங் போன்­ற­வர்கள் பிர­த­ம­ராகப் பத­வியில் இருந்த போதும், அவர்கள் எவ­ருமே இலங்­கைக்­கான அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை மேற்­கொண்­ட­தில்லை.
ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்­மோகன் சிங் போன்­ற­வர்கள் பிர­த­ம­ராக இருந்த போது, சார்க் மாநாட்­டுக்­காக கொழும்பு வந்­தி­ருந்­தனர். ஆனால், அர­ச­முறைப் பய­ண­மாக, இலங்கை அரசின் விருந்­தி­ன­ராக அவர்கள் இங்கு வந்து தங்­கி­யி­ருக்­க­வில்லை.
தற்­போ­தைய இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும் கூட, கடந்த ஜன­வ­ரியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­காது போனால், இந்தப் பயணத் திட்­டத்தை செயற்­ப­டுத்­தி­யி­ருப்­பாரா என்­பது சந்­தேகம் தான். கடந்த ஆண்டு மே மாதம் பத­விக்கு வந்­தி­ருந்த அவர், சார்க் நாடு­களில் இலங்கை, பாகிஸ்தான் தவிர்ந்த எல்லா நாடு­க­ளுக்­குமே சென்று வந்­தி­ருந்தார்.
மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்­துடன் இருந்து வந்த இடை­வெளி தான் அவ­ரது இலங்­கைக்­கான அர­சு­முறைப் பய­ணத்தைப் பிற்­போடச் செய்­தி­ருந்­தது. ஆட்­சி­ மாற்றம், இந்­தியப் பிர­த­ம­ருக்­கான கத­வு­களை துரி­த­மா­கவே திறந்து விட்­டி­ருக்­கி­றது.
கடந்த ஜன­வரி 8ம் திகதி நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை கடந்த மாதம் இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்­டி­ருந்தார்.
இந்தப் பய­ணத்தின் போது, சிவில் அணு­சக்திப் பயன்­பாடு குறித்த உடன்­பாடு ஒன்று இரு­நா­டு­க­ளுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பல உடன்­பா­டுகள் கையெ­ழுத்­தி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதும், அவ்­வ­ளவு இணக்­கப்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.
அதற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிடி­கொ­டுக்­காமல் நழு­வி­யதே முக்­கிய காரணம். புதிய அர­சாங்கம் என்­பதைக் காரணம் காட்டி அவர் பல உடன்­பா­டு­களை தவிர்த்துக் கொண்டார். புது­டில்­லியில், சீபா எனப்­படும் இந்­திய - இலங்கை கூட்டு வர்த்­தக ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டில் தாம் வேண்­டு­மென்றே கையெ­ழுத்­தி­டு­வதை தவிர்த்­த­தாக கொழும்பில் வர்த்­த­கர்கள் மத்­தியில் பேசிய போது மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருந்தார்.
இது­போல பல உடன்­பா­டு­களை அவர் தட்டிக் கழித்­தது இந்­தியத் தரப்­புக்கு ஏமாற்­ற­மா­கவே அமைந்­தி­ருந்­தது. அதே­வேளை, சீனா­வுக்கு அவ்­வ­ளவு நெருக்­க­மில்­லாத புதிய அர­சாங்­கத்தை எப்­ப­டி­யா­வது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்­பதில் இந்­தியா உறு­தி­யாக இருக்­கி­றது.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தனது இந்த வாரப் பய­ணத்தை அதற்­கா­கவே பயன்­ப­டுத்திக் கொள்வார் என்று சர்­வ­தேச ஊட­கங்கள் கணிக்­கின்­றன. அதா­வது சீனாவின் செல்­வாக்கை உடைத்து உள்­நு­ழை­வ­தற்­காக, இலங்­கை­யுடன் பொரு­ளா­தார, பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பா­டு­களை இந்­தியப் பிர­தமர் செய்து கொள்வார் என்று கரு­தப்­ப­டு­கி­றது.
இலங்­கைக்கு மட்­டு­மல்ல, சீசெல்ஸ், மாலை­தீவு, மொரீ­சியஸ் ஆகிய நாடு­க­ளுக்கும் மோடி பயணம் மேற்­கொள்­ள­வுள்ள போதிலும், கொழும்­புக்­கான பய­ணமே மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக புது­டில்­லியால் கரு­தப்­ப­டு­கி­றது.
இந்­தி­யாவின் காலுக்கு அடியில் இருக் கும் இலங்கைத் தீவில், மஹிந்த ராஜபக்ச ஆட்­சிக்­கா­லத்தில், சீனாவின் செல்­வாக்கு கடு­மை­யாக உயர்ந்­தது. துறை­மு­கங்கள், விமான நிலையம், நெடுஞ்­சா­லைகள் என்று கட்­டு­மானத் திட்­டங்­களில் கால் வைத்த சீனா, தனது நீர்­மூழ்­கி­களை கொழும்­புக்கு அனுப்­பியும், கொழும்புத் துறை­முக நக­ரத்தில் சொந்­த­மாக ஒரு நிலத்தை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுத்தும், இந்­தி­யாவை மிரள வைத்து விட்­டது.
மஹிந்த ராஜபக்ச ஆட்­சிக்­கா­லத்தில் சீனாவின் செல்­வாக்கைக் கட்­டுப்­ப­டுத்த வழி­தெ­ரி­யாமல் திணறிக் கொண்­டி­ருந்த இந்­தி­யா­வுக்கு, ஆட்­சி­மாற்றம் பெரிதும் கைகொ­டுத்­தி­ருக்­கி­றது. அதைப் பயன்­ப­டுத்திக் கொண்டும், சீனாவின் திட்­டங்­களை மீளாய்வு செய்தும், இடை­நி­றுத்­தியும், சாத­க­மான சமிக்ஞை­களை வெளிப்­ப­டுத்தி வரும், இலங்கையின் புதிய அர­சாங்­கத்­துடன் மேலும் நெருக்­கத்தை வலுப்­ப­டுத்திக் கொள்­ளவும், இந்­தியப் பிர­தமர் தனது பய­ணத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்தப் பய­ணத்தின் போது, பல உதவித் திட்­டங்­களை அவர் அறி­விப்பார் என்று எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. என்­றாலும் அது, சீனா­வுக்கு இணை­யா­ன­தாக இருக்க முடி­யாது. கொழும்பு வரும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மிக கவ­ன­மாக நிகழ்ச்சி நிரல்­களை வடி­வ­மைத்­துள்­ள­தாக புது­டில்லித் தக­வல்கள் கூறு­கின்­றன.
கொழும்பில் நடத்­தப்­போகும் இரு­த­ரப்பு பேச்­சுக்கள், யாழ்ப்­பாணம், அனு­ரா­ த­புரம் உள்­ளிட்ட நக­ரங்­க­ளுக்கு மேற்­கொள்­ள­வுள்ள பயணம், பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்தப் போகும் உரை என்­பன மோடியின் முக்­கி­ய­மான நிகழ்ச்சி நிரல்­க­ளாகும்.
இந்தப் பய­ணத்தில் மிக­முக்­கி­ய­மா­னது, இந்­தியப் பிர­தமர் கொழும்பில் நடத்­த­வுள்ள பேச்­சுக்கள் தான். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும், ஏனைய அர­சாங்கத் தரப்­பி­ன­ரு­டனும், நடத்­த­வுள்ள பேச்­சுக்­களில் இரு­த­ரப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்­த­லுக்கு முக்­கிய இடம் அளிக்­கப்­படும்.
தற்­போ­தைய நிலையில் அது ஒன்றும் மிகவும் சிக்­க­லான விவ­கா­ர­மாக இருப்­ப­தற்கு வாய்ப்­பில்லை. ஏனென்றால், கொழும்பில் ஒப்­பீட்­ட­ளவில் சீனா­வுக்கு உள்ள சாதக நிலையை விடவும், கூடு­த­லாக இந்­தி­யா­வுக்குச் சாத­க­மான சூழலே உள்­ளது.
எனவே இரு­த­ரப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்ளும் பேச்­சுக்­களில் அவ்­வ­ளவு சவால்­களோ, சுவா­ரஷ்­ய­மான விட­யங்­களோ இருப்­ப­தற்கு வாய்ப்­பில்லை. ஆனால், தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­க ளைப் பகிர்ந்­த­ளிக்கும் விவ­காரம் இந்தப் பேச்­சுக்­களில் முக்­கிய இடத்தை வகிக்கக் கூடும்.
ஏனென்றால், 28 ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக, இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ் ­காந்தி, அப்­பா­தைய இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வுடன் செய்து கொண்ட உடன்­பாட்­டுக்கு அமை­வா­கவே, தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­காக, மாகா­ண­ச­பை­களை உரு­வாக்கும் 13வது திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­பட்­டது.
ஆனாலும், இந்த 28 ஆண்­டு­களில், 13வது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தவ­றி­விட்­டது. இந்­தி­யாவும் கூட, இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுத்து 13வது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாகச் செயற்­ப­டுத்த வைப்­ப­தற்குத் தவறி விட்­டது.
ஆக, 28 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் இந்­தியப் பிர­தமர் ஒருவர் அர­சு­முறைப் பயணம் மேற்­கொள்ளும் போது, இடைப்­பட்ட இந்தக் காலப்­ப­கு­திக்குள் நிறை­வேற்­றப்­ப­டாமல் உள்ள 13வது திருத்­தச்­சட்ட வாக்­கு­றுதி குறித்து பேச்­சுக்­களை நடத்த வேண்­டிய நிலை ஒன்று உள்­ளது.
இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்­துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட மாகா­ணங்­களில் மாகா­ண­ச­பைகள் செயற்­ப­டு­கின்ற நிலையில், அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்த கோரிக்­கைகள் வலு­வாக எழுந்­தி­ருக்­கின்­றன. எனவே இந்தச் சந்­தர்ப்­பத்தில், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் எதிர்­காலம் குறித்து, இந்­தியப் பிர­தமர் பேச்சு நடத்­தாமல் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது.
அதுவும், 13வது திருத்­தச்­சட்­டத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே, தமிழர் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்றே இப்­போ­தைய இந்­திய அர­சாங்­கமும் கூறி வரு­கி­றது.
எனவே, கொழும்­பிலும் தனக்குச் சாத­க­மான அர­சாங்கம் ஒன்று ஏற்­பட்­டுள்ள சூழலை இந்­தியப் பிர­தமர் பயன்­ப­டுத்திக் கொண்டு, 13வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த அழுத்­தங்­களைக் கொடுக்­கலாம். ஆனால், அவை பற்­றிய தக­வல்கள் வெளி­வ­ருமா என்­பது சந்­தேகம் தான்.
இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தின் போது, தமிழர் பிரச்­சி­னைக்கு நிலை­யான, நியா­ய­மான தீர்வை எட்­டு­வ­தற்கு இந்­தியா அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்றே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்க்­கி­றது, அதனை அவர்கள், மோடி­யு­ட­னான சந்­திப்பில் வலி­யு­றுத்­தவும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.
ஆனால், சிங்­களத் தேசி­ய­வா­திகள் இந்­தி­யாவை கொஞ்சம் கலக்­கத்­துடன் தான் பார்க்­கின்­றனர். தமி­ழர்­க­ளுக்கு இந்­தியா அள்ளிக் கொடுத்து விடும் என்ற அச்சம் அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. 1987ல், இந்­திய - இலங்கை உடன்­பாடு ஏற்­பட்ட போதே, அது தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் ஒன்­றாக இல்­லாத போதிலும், சிங்­களத் தேசி­ய­வா­திகள் அதனைக் கடு­மை­யா­கவே எதிர்த்­தனர்.
அதனால், தென்­னி­லங்­கையில் பெரும் இரத்­தக்­க­ளரி ஏற்­பட்­ட­தையும் மறக்க முடி­யாது. அது­போன்­ற­தொரு நிலை மீண்டும் ஏற்­படக் கூடாது என்­ப­திலும் இந்­தியா கவ­ன­மா­கவே இருக்கும். அதனால் தான், யாழ்ப்­பா­ணத்­துக்­கான பய­ணத்­துடன் கூடவே, அனு­ரா­த­பு­ர­த்திற்­கான பய­ணத்­தையும் திட்­ட­மிட்­டுள்ளார்
நரேந்­திர மோடி. தமி­ழர்­களின் கலா­சாரத் தலை­ந­க­ராக யாழ்ப்­பாணம் எப்­படி பார்க்­கப்­ப­டு­கி­றதோ, சிங்­கள பௌத்­தர்­களின் கலா­சார தலை­ந­க­ராக, அனு­ரா­த­புரம் கரு­தப்­ப­டு­கி­றது. தமி­ழர்­க­ளையும், சிங்­கள பௌத்­தர்­க­ளையும் சம­நி­லையில் வைத்துப் பார்ப்­ப­தான ஒரு தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வது மோடியின் முக்­கிய இலக்­காக இருக்­கலாம்.
அதை­விட திரு­கோ­ண­மலை, கண்டி, மன்னார் ஆகிய இடங்­களும் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் உள்­ளன. எனினும், அவர் யாழ்ப்­பாணம் மற்றும் அனு­ரா­த­புரம் தவிர்ந்த, வேறு எங்­கெங்கு செல்­ல­வுள்ளார் என்­பது இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை முடி­வா­க­வில்லை.
ஆனாலும் அதி­க­ளவு இடங்­க­ளுக்கு பயணம் செய்­வதை தவிர்க்­கின்ற ஒரு தலைவர் நரேந்­திர மோடி அல்ல. எனவே பேச்­சுக்கள் தவிர்ந்த நேரத்தை தனது பய­ணங்­க­ளுக்­காக அவர் பயன்­ப­டுத்திக் கொள்ளக் கூடும். மோடியின் இலங்கைப் பய­ணத்தின் முக்­கி­ய­மா­ன­தொரு அங்­க­மாக, வரும் 13ம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­ற­வுள்ளார்.
முன்னாள் இந்­தியப் பிர­த­மர்­க­ளான ஜவ­ஹர்லால் நேரு, இந்­தி­ரா­காந்தி, மொராய்ஜி தேசாய் ஆகி­யோ­ருக்குப் பின்னர், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­ற­வுள்ள நான்­கா­வது இந்­தியப் பிர­தமர் மோடி ஆவார். கடை­சி­யாக மொராய்ஜி தேசாய் 1979 ஆம் ஆண்டு கொழும்பு வந்திருந்த போது, பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
36 ஆண்டுகளுக்குப் பின்னர், மோடி உரையாற்றப் போகிறார். அதேவேளை, இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கே மோடி இந்தப் பயணத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை இலங்கை அரசும் தமது நலன்களை உறுதிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தும். தமிழர் நலன் குறித்து இந்த இருதரப்பும் எந்தளவுக்கு கரிசனை செலுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனினும், மோடி யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை, தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தும் உத்தியாக புதுடில்லி ஊடகங்கள் கருதுகின்றன.
தமிழ்நாட்டில் காலூன்ற பா.ஜ.க. கடுமையான முயற்சிக்கின்ற நிலையில், யாழ்ப்பாணப் பயணத்தை அவர் அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இது, இந்திய இலங்கை அரசுகளின் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால், தமிழர் தரப்புக்கும் சாதகமானதொரு வெளி தோன்றியிருப்பதை சுட்டி நிற்கிறது.
இது எந்தளவுக்கு தமிழருக்கு நன்மையளிப்பதாக அமையும் என்று ஒருபோதும் நிச்சயமாக கூற முடியாது.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms3F.html

Geen opmerkingen:

Een reactie posten