[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:59.32 AM GMT ]
புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றம் தற்போது 225 பிரதிநிதிகளை கொண்டுள்ளது இதனை 235 ஆக அதிகரிக்க வேண்டும்.
வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர் எண்ணிக்கையை விட அரைவாசியாக குறைந்து காணப்பட்ட காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய உயர்த்தப்பட வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வதை மக்கள் எதிர்க்கவில்லை. அமைச்சர்களின் எண்ணிக்கை உயர்வதையே மக்கள் எதிர்ப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 12:05.09 PM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகளுடன் இருக்கும் தொடர்புகளை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியார் நாளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2I.html
வேறுவேறான விபத்து சம்பவங்களில் நால்வர் பலி! மூவர் படுகாயம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 12:20.21 PM GMT ]
காயமடைந்தவர் தற்பொழுது மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதி வேகமாக பயணித்த லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையை விட்டு விலகியதினாலேயே இவ்விபத்து நிகழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
இதேவேளை சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து :கணவனும் மனைவியும் பலி இரு பிள்ளைகள் படுகாயம்
இரத்தினபுரி, பெல்மதுளை பிரதேசத்தில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இவர்களது இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படு காயமடைந்துள்ள அதேவேளை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரின் கால் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிக்கொண்ட முச்சக்கரவண்டிகளுடன் மேலும் இரண்டு மேட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதாக காவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில் அவற்றில் ஒன்றில் பயணித்த இரத்தினபுரி மல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் 30 வயதுகள் என அறியப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
பெல்மதுளையிலிருந்து பண்டாரகம நோக்கியும் இரத்தினபுரியிலிருந்து பெல்மதுளை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டிகளே முதலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை இதே பகுதிகளில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் மோதுண்ட முச்சக்கரவண்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கால் முறிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கவும்: சீனா
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:01.22 PM GMT ]
சீனத் தூதுவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில், சீனாவினால் பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தொடர்புடைய செய்தி- கொழும்பு போட் சிற்றி நிர்மாணப் பணிகளை சீனா இடைநிறுத்தியது
மைத்திரி பிரதமராக போட்டியிட்டால் ரணிலுக்கு பாரிய சவால்: ரோசி சேனாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:26.49 PM GMT ]
இன்று காலை வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை குறைத்தால் பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரம் கிடைக்கப்படும்.
குறித்த அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கிய பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது தேர்தலில் பிரதம வேட்பாளாராக போட்டியிடவுள்ளதாக அன்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய சவாலாகி விடும்.
தற்பொழுது தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன.
அதற்கமைய எதிர்வரும் பொது தேர்தலுக்காக பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms3D.html
Geen opmerkingen:
Een reactie posten