தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

தமிழ் தெரியாது என்று நீதிமன்ற நிருபர்கள் முன் சுமந்திரன் நடிப்பு: உலக மகா ஜித்தன் !

அமைச்சரின் மகன் 17 வயது மாணவியை இழுத்துக்கொண்டு ஓடினார்: பரபரப்புச் செய்தி !

[ Mar 18, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 13850 ]
இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகன் , 17 வயது மாணவி ஒருவரை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. கிருளப்பனையில் உள்ள பெரும் வர்த்தகரான காமினி ராஜசிங்க என்பவரின் மகள் பள்ளி சென்றதாகவும். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. தமது குடும்பம் ராஜித சேனாரட்னவின் குடும்பத்தோடு நெருங்காலம் நட்ப்பு பாராட்டி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனைப் பயன்படுத்தி 26 வயதுடைய அமைச்சரின் மகன் தனது மகளை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டதாக அவர் மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன வீட்டில் தான் தனது மகள் தற்போது இருப்பதாக வர்த்தகர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மீடியாக்களுக்கு நேரடியாக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மகிந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பல அமைச்சர்களின் மகன் மார் அடாவடிகளில் ஈடுபட்டார்கள். ஆனால் தற்போதும் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது என்பது ஆச்சரியமான விடையம் தான்.

தமிழ் தெரியாது என்று நீதிமன்ற நிருபர்கள் முன் சுமந்திரன் நடிப்பு: உலக மகா ஜித்தன் !

[ Mar 18, 2015 06:37:04 AM | வாசித்தோர் : 17320 ]
உயர் நிலை நீதிமன்றத்தில் வழக்குப் பேசுகின்ற தமிழ் சட்டத்தரணிகளில் பெயர் குறிப்பிடத்தக்க ஒருவர் எம். ஏ. சுமந்திரன். இங்கு வழக்குகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், விசேட மனுக்கள், அவசர சட்டமூலங்கள் தொடர்பான விவாதங்கள், தடை உத்தரவு கோரும் எழுத்தாணைகள் போன்றவற்றில் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் பெரும்பாலும் ஆஜராகுவார். இதனால் இது பெரும்பாலும் பரபரப்பான வழக்காக தான் இருப்பது வழக்கம். எனவே நிருபர்களும் நீதிமன்றில் அவரிடம் சென்று கேள்விகளைக் கேட்ப்பது சாதாரணம். ஆனால் மனுஷன் தமிழில் பேசவே மாட்டாராம். காலில் ஆணி ஒன்றை கட்டிக்கொண்டு நிற்பது போல நுனிக் காலில் தான் இந்த மனுஷன் நின்று பேசுவார் என்கிறார்கள்.
ஏதோஆயிரத்தி எட்டு வேலைகள் இருப்பதுபோலவும் , அவசரமாக இருப்பதுபோலவும் அடிக்கடி இவர் தன்னைக் காட்டிகொள்வது வழக்கம். ஒரு முறை தமிழ் நிருபர் ஒருவர் இவரிடம் தமிழில் கேள்வி ஒன்றை கேட்டுவிட்டு அதற்கான பதிலை தமிழில் தருமாறு கூறவே , "எனக்கு தமிழ் வராது" என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் அதற்கான பதிலை வழங்கியுள்ளார் சுமந்திரன்.பத்மசீலன் என்பவர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலம். சுமந்திரன் பற்றி ஏதோ பேச்சு வர சுமந்திரனுக்கு தமிழ் தெரியாதாமே , என்று நீதிமன்ற நிருபர் ஒருவர் கூறி இருக்கின்றார்.
இது என்ன பிழையான கதை, சுமந்திரன் கிறிஸ்தவ போதனைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழில்தானே மேற்கொள்கின்றார் என்று போட்டு உடைத்தார் சுமந்திரனின் குடும்ப நண்பரான பத்மசீலன்.
http://www.athirvu.com/newsdetail/2616.html

Geen opmerkingen:

Een reactie posten