[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 05:32.07 AM GMT ]
18வது அரசியலமைப்பை இரத்து செய்தல் மற்றும் 17வது அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருதல், நல்லாட்சி தொடர்பான சரத்தை இணைத்தல் என்பவற்றுக்கு உடன்பட கூடியதாகவுள்ளது.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலுள்ள சில சரத்துகளை அகற்றுவது தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதனால் இதன் யோசனையை அடுத்த வாரம் முன்வைக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தேசிய ஔடத கொள்கை சட்டமூலத்தின் 3வது வாசிப்பு மீதான விவாதம் நாளை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 06:07.15 AM GMT ]
தேசிய ஔடதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சட்டமூலத்தை மறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மருந்து நிறுவனங்களினால் கடந்த காலங்களில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டதுடன் 2ம் வாசிப்பு அவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சுயேட்சை உறுப்பினர் அஜித் குமார ஆகியோர் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் மெராபெனும் நோய் எதிர்ப்புசக்தி ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக குறித்த மருந்து வைத்தியசாலையின் கையிருப்பில் இல்லை எனவும், நோயாளர்கள் அவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மருந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ள போதிலும், இதுவரை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் நாளை காணாமல் போனவர்களின் உறவுகள் அடையாள உண்ணாவிரதம்
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 06:11.59 AM GMT ]
கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் காலை 9 மணி தொடக்கம் இந்த உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இதில் மனித உரிமை அமைப்புக்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் போனவர்கள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்! [ புதன்கிழமை, 04 மார்ச் 2015]
யாழ்.மாவட்டத்தில் 1996ம் ஆண்டு தொடக்கம் இறுதியுத்தம் வரையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர்.
யாழ்.குடாநாட்டில் வெள்ளை வாகனத்தில் படையினரின் சீருடையுடனும், அடையாளம் தெரியாமலும் வந்த ஆயுததாரிகளினால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போயினர்.
இவர்களுடைய உறவினர்களே இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் வீதியில் உட்கார்ந்து தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தாங்கியவாறு கண்ணீர்விட்டழுது, தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என அறிந்து தகவல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் யாழ்.மாவட்டச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த மக்கள், பின்னர் வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியதுடன் அவர்களுக்கும் மகஜர்களை கையளித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmp7D.html
Geen opmerkingen:
Een reactie posten