தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற சன் ஷி கப்பலுக்கு 6 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ள கனடா

இலங்கையில் மருந்தகங்கள் 30 ஆயிரம்! பதிவான மருந்தாளர்கள் 7ஆயிரம் பேர் மட்டுமே!
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 11:10.53 AM GMT ]
நாட்டில் சுமார் 30,000ற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் காணப்பட்ட போதிலும் 6965 பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்களே இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மொத்த மருந்தாளர்களின் எண்ணிக்கை 6965 என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது
நாட்டின் தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளர் ஒருவர் இன்றி, மருந்தகமொன்றை ஆரம்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் நிலைமையிலும் நாட்டின் பல மருந்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்கள் இல்லை என்பது புள்ளி விபர அடிப்படையில் அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள மருந்தாளர்கள் 6965ல் 1437 பேர் அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மருந்தாளர்கள் தனியார் நிறுவனங்களில் கடமையாற்ற முடியாது.
எனவே, 30,000 மருந்தகங்களுக்காக 5528 மருந்தாளர்களே கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என அரசாங்க மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

ஹற்றன் அரச வங்கியொன்றில் வயோதிப பெண்ணை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபா மோசடி!
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 11:17.10 AM GMT ]
ஹற்றனில் ஒரு அரச வங்கி ஒன்றில் 20,000 காசு மீளப்பெற வந்த ஒரு வயதான பெண்ணை ஏமாற்றி வங்கிக்குள்ளே அந்த பணத்தை மோசடி செய்த சந்தேகநபரை  தேடி ஹற்றன் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்
ஹற்றன் பிரதான வீதியில் உள்ள இந்த அரச வங்கியில் குறித்த பெண்ணுக்கு காசு மீளப்பெற தெரியாததன் காரணமாக மேற்படி வங்கியில் இருந்த ஒரு இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.
குறித்த  இளைஞர் பணம் மீளப்பெறும் பற்றுச்சீட்டினை நிரப்பி குறித்த பெண்ணிடம் கையொப்பம் வாங்கி வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டவுடன், பணத்தை  உரிய வயோதிப பெண்ணிடம் கொடுக்காது வங்கியிலிருந்து  தப்பி ஓடியுள்ளதாக ஹற்றன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தன்னுடைய சேமநல நிதியிலிருந்து வீட்டு தேவைக்காக 20,000 ரூபா மீளப்பெற வந்த வேளையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இன்று 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை பற்றி குறித்த வங்கியின் முகாமையாளரிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,
இச்சம்பவம் உண்மை எனவும், இந்த வங்கியில் கண்காணிப்பு கமரா இல்லாத காரணத்தினால் அவரை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரும் இந்த வங்கிக்கு கண்காணிப்பு கமரா வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இந்த விடயத்தில் அசமந்த போக்கை காட்டி வருவதாகவும் இதனால் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற சன் ஷி கப்பலுக்கு 6 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ள கனடா
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 11:42.52 AM GMT ]
கனேடிய குடிவரவு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்த, 492 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் கனடாவுக்கு ஏற்றிச் சென்ற கப்பலை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
எம்.பி சன் ஷி என்ற இந்த கப்பலை நிறுத்தி வைப்பதற்காகவும் பராமரிக்கவும் 6 லட்சம் டொலர்களை கனேடிய அரசாங்கம் செலவிடப்பட்டுள்ளது.
கப்பலை கொள்வனவு செய்ய எவரும் முன்வராத காரணத்தினால், கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பு நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஸ்டெபானி ஹூடெல் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் குறித்த அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறது. கப்பலில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக எல்லை சேவைகள் முகவர் அமைப்பு விக்டோரிய என்ற நிறுவனத்திற்கு 157.697 டொலர்களுக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியது.
இந்த கப்பல் தற்போது வான்கூவருக்கு தென் கிழக்கில் ஹானாசீஸ் தீவில் நங்குகூரமிடப்பட்டுள்ளது.
கப்பலை கழுவுதல், அவற்றில் இருக்கும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவு எண்ணெய்களை அப்புறப்படுத்தல் போன்ற பணிகள் இதில் உள்ளடங்கும்.
சன் ஷீ கப்பல் 2010 ஆம் ஆண்டு கனடாவை சென்றடைந்தது. இரண்டு வருடங்கள் நானிமோ என்ற தனியார் கப்பல் முனையத்தில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்காக 4 லட்சம் டொலர்களை தாம் செலவிட்டுள்ளதாக கனேடிய எல்லை சேவைகள் முகவர் அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
கப்பலை கொள்வனவு செய்ய ஒருவரை கண்டறிவது குறித்து ஆராய சமஷ்டி நீதிமன்றம் குழு ஒன்றை நியமித்துள்ளது. எவ்வாறாயினும் கப்பலை பராமரிக்க அரசாங்கம் எவ்வளவு பணத்தை செலவிட்டது என்பது குறித்து பேச்சாளர் கூறவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq7G.html

Geen opmerkingen:

Een reactie posten