[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 09:35.38 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கிடைத்த மக்கள் ஆணையை பிக்பொகட் அடித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை மறந்து விட்டு தேர்தலுக்கு செல்ல எந்த உரிமையுமில்லை.
பிரதமர் பதவியையும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அரசாங்கத்தில் கரணம் அடித்து வருகிறது.
எனினும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் உட்பட நல்லாட்சியை எதிர்பார்த்தே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
இதனால், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளாமல் ஏப்ரல் 23 ம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூற எவருக்கும் உரிமையில்லை எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மோடியால் மாத்திரமே மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: ஜீ.கே.வாசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 10:10.53 AM GMT ]
திண்டுக்கல்லில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மத்திய மற்றும் மாநில அரசுக்கள் மீது தமிழக மீனவர்களுக்கு இருந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஜீ.கே.வாசன்,
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் மாத்திரமே தீர்வு காணமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய பிரதமரின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கச்சத்தீவு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய இலங்கைக்கு இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனவும் ஜீ.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மோடியின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு நன்மை: தமிழிசை நம்பிக்கை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தினால் தமிழர்களுக்கு நிச்சயமாக நன்மை கிட்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தராஜன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தினால் தமிழர்களுக்கு நன்மைதான் ஏற்படும். இந்நிலையில் வைகோ, திருமாவளவன், இளங்கோவன் ஆகியோருக்கு பிரதமரை விமர்சிக்க எவ்வித உரிமையும் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் அரசியல் சுய இலாபம் கருதியே இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை கையிலெடுத்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறை மாற்றம் சிறுபான்மையினரை பாதிக்க கூடாது: ஹமீதின் சுட்டிக்காட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 10:31.26 AM GMT ]
கல்முனையில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சி மாற்றத்தின் ஊடாக சிறுபான்மையினரும் சிறப்பாக வாழக்கூடிய ஒரு சூழல் உருவாக வேண்டும்.
அத்துடன் நாட்டில் காணப்படும் இரு பிரதான கட்சிகளும் நினைத்து தனியே தேர்தல் முறை மாற்றத்தினை கொண்டு வராது சிறுபான்மை இனத்தவருடன் கலந்தாலோசித்து சிறந்த தீர்வை பெற்று அதன் ஊடாக கொண்டுவரப்படும் மாற்றத்தினையே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சிறுபான்மையினத்தவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு குழுவாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2C.html
Geen opmerkingen:
Een reactie posten