[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:50.51 AM GMT ]
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எல்.எல்.ஆர்.சி என்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் தாம் சாட்சியமளித்ததாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அதன் முன் சாட்சியமளிக்க தாம் தயார். இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிக்கு தாம் தாமதமின்றி ஆதரவு வழங்கவுள்ளதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணையை தாம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முரளிதரன், வெளியக விசாரணைகளையே எதிர்த்து வந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை இராணுவம் திட்டமிட்டு தமிழர்களை கொல்லவில்லை என்று முரளிதரன் நியாயப்படுத்தியுள்ளார். எனவே அது இனப்படுகொலை என்ற பெயரில் அழைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிவடைந்துள்ள நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் முரளிதரன் கோரியுள்ளார்.
இரண்டு பயணிகளே வருகை! மூடப்படுகிறது மத்தள விமான நிலையம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 05:55.41 AM GMT ]
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை, துணை தலைவர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தைப் பராமரிப்பதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த மாதம் இரண்டு பயணிகள் மட்டுமே விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவில் பணத்தை செலவிட்டு விமான நிலையத்தை பராமரிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் 450 பேர் பணியாற்றி வருவதாகவும் இதில் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலத்தில் சரக்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக இவ் விமான நிலையம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயிறுடன் விமல்: தூக்கில் தொங்க மறுக்கிறார் ரஞ்சன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 07:10.12 AM GMT ]
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த வெள்ளியன்று கண்டியில் பேரணியொன்று இடம்பெற்றது.
இப்பேரணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
குறித்த பேரணிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையிலேயே கயிறு தயாராகவுள்ளது தாங்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தயாரா என விமல், ரஞ்சனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை மக்கள் கூட்டத்தை காட்டி மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல குறித்த குழு முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அவ்வாறான ஒரு சவால் விடுக்கவில்லை, அவ்வாறு சவால் விட்டிருப்பின் அதனை நிரூபித்து காட்டுமாறும், இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் பிரதி அமைச்சர் விமலுக்கு சவால் விடுத்துள்ளார்.
விமல் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்து, அரசியல் அனாதைகளாக்கபட்ட விமல் வீரவன்ச, கம்மன்பிலவின் அறிவித்தல்களுக்கு பதலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் பேரணிகளுக்கு மக்களை அழைத்துவருவதற்கு 122 பஸ்களை பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்ததை ரஞ்சன் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் பேரணிக்கு அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மக்களை அழைத்து வந்ததாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் நான்கரை இலட்ச வாக்குகளில் மகிந்த தோல்வியுற்றார் என்பதையும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இணையத்தளங்கள் ஊடாக தனக்கு சேரறு பூசுவதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0B.html
பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:25.36 AM GMT ]
இந்த நாளில், சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து பொது மக்களின் கருத்து என்ன?
பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
மேலும், பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிற்பு உள்ளிட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்ற கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0J.html
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் பிரான்சில் காலமானார்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 10:08.58 AM GMT ]
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.
எழுபதுகளில் இளைஞர் இயக்கங்களுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.
விக்கிப்பீடியாவிலிருந்து கி. பி. அரவிந்தன் தகவல்
கி. பி. அரவிந்தன் (பிறப்பு: 1953, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளர்.
அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.
அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்திவருகின்றார்.
1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர்.
1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறினார்.
1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2A.html
Geen opmerkingen:
Een reactie posten