[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:03.33 AM GMT ]
சுவிஸ்சர்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வங்கிகளிலேயே இவ்வாறு பணம் பதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மூன்று நாடுகளும் இந்த ஆரம்பகட்ட விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், குறிப்பிட்ட குற்றவாளிகளின் பெயர் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் என்பதன் அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன.
பதுக்கப்பட்ட பணத்தை நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவரும் முயற்சிகளில் உதவுவதற்காக உலகவங்கியினால் விசேட குழுவொன்று இலங்கை வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சுயாதீன ஆணைக்குழு விரைவில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:15.31 AM GMT ]
தொழில் நுட்பம் மற்றும் உள்ளடக்கங்கள் இதன் மூலம் ஒழுக்கப்படுத்தப்படும். ஆணைக்குழுவில் ஊடகங்களுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்ளடக்கப்படுவார்கள் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தான தெரிவித்துள்ளார்.
இதனிடையே நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கனை பரிந்துரைப்பதற்காக ஏப்ரல் மாதம் இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2E.html
CSN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஒரு வருட சம்பளம் நாளை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 11:52.09 AM GMT ]
CSN தொலைக்காட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்த ஊழியர்களுக்கான ஒரு வருட சம்பளத்தை வழங்க CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ளது.
இதன் படி CSN தொலைக்காட்சியில் 3 வருடமாக வேலை செய்த ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 7.5 மடங்கினை வழங்கவுள்ளதாக அதன் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு வருட சம்பளத்தினை நாளை வழங்கவுள்ளது. CSN முகாமைத்துவ அறிக்கையின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்த 50க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த நிறுவனம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் விளையாட்டு தொலைக்காட்சி சேவைகளுக்கு ஆயிரம் மில்லியன் வரி கட்ட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms2F.html
Geen opmerkingen:
Een reactie posten