தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

இலங்கையின் பிரதமரும் ஜனாதிபதியும் வரவேற்பு கலாசார மீறல்

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை சீனாவுக்கு எதிரானதென ஊடகங்கள் சித்திரிக்கின்றன!- சீன செய்தி நிறுவனம்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 03:12.07 PM GMT ]
.இலங்கைக்கு இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ள விஜயம் மூலம் சீனாவின் செல்வாக்கை பாதிக்கும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
சீன செய்தி நிறுவனம் ஒன்று இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறுகிய நோக்கத்தை மனதில் கொண்டே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சீன செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ள விஜயம்ää சீனாவுடன் இலங்கைக்கு உள்ள உறவை பாதிக்காது. மாறாக அதிகரிக்கும் என்று சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையும் சீனாவும் சிறந்த உறவுகளை பேணிவருகின்றன.
அதேபோன்று இந்தியாவும் சீனாவும் உறவுகளை பேணிவருகின்றன.
எனவே இந்திய சீனா உறவிலோ அல்லது இலங்கை சீன உறவிலோ பாதிப்புக்கள் ஏற்படாது என்று சீன செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw1A.html


இலங்கையின் பிரதமரும் ஜனாதிபதியும் வரவேற்பு கலாசார மீறல்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 03:51.46 PM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு வருகை தந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜதந்திர கலாசாரத்தை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல காத்திருந்தார். எனினும் 27 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வருகிறார் என்ற முக்கியத்துவத்தை கருதி ரணில் விக்கிரமசிங்க விமான நிலையம் சென்று மோடியை வரவேற்றுள்ளார்.
இலங்கையின் பிரதமர், இந்திய பிரதமரை வரவேற்க வருவார் என்று தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனினும் அவர் அங்கு பிரசன்னமானது சந்தோசமான விடயம் என்று சிரேஸ்ட இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை நரேந்திர மோடி அனுரதபுரம் செல்லும் போதும் ஜனாதிபதி மைத்திரிபாலவும் இராஜதந்திர கலாசாரத்தை மீறி மோடியை வரவேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw1B.html


Geen opmerkingen:

Een reactie posten