[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 02:10.08 PM GMT ]
இலங்கைக்கு இன்று விஜயம் செய்த இந்திய பிரதமர் பல்வேறு இலங்கைத் தலைவர்களை சந்தித்துள்ளார்.
அதன் ஓர் கட்டமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை, கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவையும் சந்திக்க உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் மோடி சந்திப்பார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw0E.html
தேசத்தின் தந்தையாக மஹிந்தவை கருத வேண்டும்!- டிலான் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 02:19.30 PM GMT ]
முன்னாள் பிரதமர் தேசமான்ய டி.எஸ்.சேனாநாயக்க தேசத்தின் தாத்தாவாகவே கருதப்பட வேண்டும்.
டி.எஸ்.சேனாநாயக்கவை இழிவுபடுத்த இவ்வாறு நான் கூறவில்லை.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த முழுப் பெருமையும் மஹிந்த ராஜபக்சவையே சாரும்.
எனவே, மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவரின் கீழ் பிரதமராக செயற்படுவதனை நான் விரும்பவில்லை.
மஹிந்த ராஜபக்சவிற்கு தேசத்தின் தந்தை என்ற பட்டம் சூட்டப்பட வேண்டும்.
மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் கூறவில்லை. எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் பெயரளவு பிரதமராக இருப்பதனை நான் விரும்பவில்லை.
19ம் திருத்தச் சட்டம் இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னரே அமுல்படுத்தப்படும்.
எனவே நிறைவேற்று அதிகார பிரதமர் ஒருவர் ஐந்து ஆண்டுகளின் பின்னரே உருவாகுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனை மைத்திரிபால சிறிசேனவோ, சந்திரிக்காவோ, மஹிந்தவோ விரும்பவில்லை.
சிங்கமும் புலியும் மோதிக் கொள்ளட்டும் என காத்திருக்கும் நரியைப் போன்று ரணில் விக்ரமசிங்க காத்திருப்பதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார் மோடி
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 02:43.22 PM GMT ]
இன்று மாலை இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் 400 உள்நாட்டு வர்த்தகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவினதும் இலங்கையினதும் வர்த்தக உறவு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தக பொருளாதார முதலீட்டு உதவிகளை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw0H.html
சிறிலங்காவினை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்: பகீரதி விவகாரத்தில் ஜெனீவாவில் பிரான்ஸ் கருத்து!
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 02:47.13 PM GMT ]
சிறிலங்காவில் இருந்து பிரான்சுக்கு திரும்ப இருந்தவேளை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முருகேசு பகீரதி மற்றும் அவரது மகள் ஆகியோரது விவகாரம் குறித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் பிரான்ஸ் அதிகாரிகள் மட்டத்தில்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரையாடல்களை நடத்தியிருந்தது.
இந்த உரையாடலின் பொழுதே பிரென்சு உயர்மட்ட அதிகாரி இக்கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும், அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பகீரதியினை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதோடு, பிரான்ஸ் திரும்புவதற்கான அனுமதியினையும் மறுத்துள்ளது.
இந்நிலையில் ஜெனீவாக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கடந்த புதனன்று பிரென்சு உயர் அதிகாரிகளுடன் இவ்விவகாரம் குறித்து உரையாடியுள்ளார்.
குறித்த கைது சம்பவம் தொடர்பில் ஏலவே சிறிலங்காவில் உள்ள பிரென்சு தூதரகரத்தினதும் மற்றும் தலைநகர் பாரிசில் உள்ள பிரென்சு வெளிவிவகார அமைச்சினதும் கவனத்துக்கு கொண்டு சென்றதன் தொடர்சியாகவே கடந்த புதனன்று ஜெனீவாவில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மதியம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் சார்பில் ஆஜரான சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அவதானித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி, ஜெயகணேஸ் பகீரதியை மூன்று நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.
இவரை இலங்கை அரசு கடற் புலிகளின் முக்கியஸ்தர் என குற்றஞ் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது பெண் குழந்தை சாம்ராஜூ இவ்வார ஆரம்பத்தில் பகீரதியின் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான மேலதிக விபரம் விரைவில்
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmw0I.html
Geen opmerkingen:
Een reactie posten