குறைந்த பட்சம் கோட்டபாயவை கைதுசெய்யவேண்டும் என்ற , கோரிக்கை சட்டமா அதிபரால் ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டபாய ஒருவேளை கைதாகலாம் என்ற சூழ் நிலை உருவாகியுள்ளது. இன்று (13) அதிகாலை சுமார் 3.30 க்கு , காலி கடலில் இருந்து மாலை தீவு பக்கமாக அதிவேக படகு ஒன்று விரைவாகச் செல்வதாக , கடல்படை தளத்தின் ராடார் திரை காட்டியது. இதனையடுத்து , கடல் படையினர் குறித்த அதிவேகப் படகை மடக்கிப் பிடிக்க களம் இறங்கினார்கள். மேலும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று அதிகாலை தான் மீண்டும் இலங்கையின் வேவு பார்கும் ஆளில்லா விமானமும் பறந்துள்ளது. அதன் வழி காட்டலில் தான் குறித்த படகை சர்வதேச கடல் பரப்பில் வைத்து தான் இலங்கை கடல்படையினர் மடக்கிப் பிடித்துள்ளார்கள் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஏனைய இணையங்கள் குறிப்பிடுவதுபோல அதில் கோட்டபாயவுக்கு நெருக்கமான 15 நபர்களோ இல்லை கோட்டபாய ராஜபக்ஷவோ அதில் இருக்கவில்லை. அப்படி இருக்க எவ்வாறு கோட்டபாய தப்பிச் செல்ல முற்பட்டார் என்று செய்தி வருகிறது ? என்று அனைவரும் யோசிப்பீர்கள். இதில் ஒரு பின்னணி இருக்கிறது. இவ்வளவு புத்திக் கூர்மை , ராணுவ அறிவு, கடல் படையின் திறன் என்று பலதையும் அறிந்திருக்கும் கோட்டபாய இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகதப்பிச் செல்ல நினைப்பாரா ? ஒருவேளை மாட்டிக்கொண்டால் மானம் கப்பல் ஏறுவது போதாது என்று , உடனடியாக கைதுசெய்யபப்படவும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது அல்லவா. இருப்பினும் இந்த அதிவேகப் படகை செலுத்திய நபரின் மோபைல் தொலைபேசியில் , கோட்டபாயவின் பர்சனல் நம்பர் பதிவாகியுள்ளது. மேலும் அவர் இலங்கை கடல் பரப்பில் நின்றவேளை கோட்டபாயவோடு தொடர்பில் இருந்துள்ளார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவருகிறது.
இலங்கை புலனாய்வுத்துறையினர் என்ன நினைக்கிறார்கள் என்றால், இது ஒரு ஒத்திகையாக இருக்கலாம் என்று. அதாவது இலங்கை கடல் பரப்பில் இருந்து ஒரு அதிவேகப் படகு சென்றால் சுமார் எத்தனை நிமிடங்களில் அல்லது மணித்தியாலத்தில் இலங்கை கடற்படையால் திரத்திப் பிடிக்க முடிகிறது ? தற்போது உள்ள சூழ் நிலையில் அவர்கள் எதனைப் பாவிக்கிறார்கள். யார் உதவியை நாடுகிறார்கள். சர்வதேச கடல் எல்லைவரை செல்கிறார்களா ? இல்லையா ? என்பதுபோன்ற பல விடையங்களை நாடி பிடித்துப் பார்கவே இந்த பரீட்சாத்த ஓட்டம் நடந்துள்ளதா ? என்று சந்தேகிக்கிறார்கள். இதனை வைத்து ஒரு கணக்கைப் போட்டால், தற்போது உள்ள படகின் வேகத்தை விட அதிகூடிய வேகம் கொண்ட படகை ஓட்டிச் சென்றால் , ஒருவேளை தப்பிச் செல்ல முடியும். எனவே கோட்டபாய அல்லது முக்கியமான சில நபர்கள் தப்ப இது ஒரு ஒத்திகை பார்கப்பட்டுள்ளது என்று நம்பலாம்.
மேலும் மாலை தீவுக்கு அருகாமையில் ஆடம்பர செகுசு படகு ஒன்றும் தனியே தரித்து நின்றுள்ளது என்று கடல்படையினர் கண்டு பிடித்துள்ளார்கள். இருப்பினும் அவ்வளவு தூரம் சென்று இலங்கை கடல்படையால் கைதுசெய்ய முடியாது. அதனால் அந்த ஆடம்பர படகில் யார் இருந்தார்கள் என்று தெரியவில்லை என்று கடல்படையினர் தெரிவித்துள்ளார்கள். இதனை ரணில் அரசாங்கம் ஒருவேளை மூடி மறைக்கலாம். இருப்பினும் சிங்கள இணையங்கள் இது தொடர்பான செய்திகளை தற்போது வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:
Een reactie posten