19 Mar 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764271&archive=&start_from=&ucat=1&
வெலே சுதாவின் கூட்டாளி "சித்தீக்" பாகிஸ்தானில் கைது (படம் இணைப்பு)
|
போதைப்பொருள் வர்த்தகர் வெலேசுதாவின் நெருங்கிய கூட்டாளியான, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர் மொஹம்மட் மகீன் மொஹம்மட் சித்தீக் என்பவரை பாகிஸ்தான் உளவுப் பிரிவு கைது செய்துள்ளது.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட சித்திக் இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
கொழும்பு, மருதானை, மொஹிதீன் மஸ்ஜித் வீதியைச் சோ்ந்த 46 வயதான சித்தீக், பாகிஸ்தான் பெண்ணொருவரை மணம்முடித்து அங்கு தலைமறைவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 |
| 19 Mar 2015 |
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764727&archive=&start_from=&ucat=1&
6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம் (படம் இணைப்பு)
|
இந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு பிரதமர் மோடி தனது கைப்பட எழுதிய நன்றி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மத்திய பிரதேசைச் சேர்ந்த பாவ்யா ஆவ்தி என்ற 6 வயது சிறுவன் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஏழைக் குழந்தைகள் சிலரை பார்த்துள்ளான்.
அப்போது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பாவ்யாவின் மனதில் எண்ணம் எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த சிறுவன், அவனது தாத்தாவின் உதவியுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனுடன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.107-யையும், பிரதமரின் ஏழைக் குழந்தைகள் நலவாழ்வு திட்டத்திற்காக அனுப்பி வைத்துள்ளான்.
இந்நிலையில், அந்த கடிதத்தை ஏற்று கொண்ட பிரதமர் மோடி, கடிதத்தை பெற்றுக் கொண்டதாகவும், நிதி அளித்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டு தனது கைப்பட எழுதிய கடிதத்தை பாவ்யாவுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், அந்த நன்றி கடிதத்தை பெற்ற சிறுவன் பிரதமரின் கடிதம் எதிர்பாராத பிறந்தநாள் பரிசு என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 |
19 Mar 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764899&archive=&start_from=&ucat=1&
|
|
Geen opmerkingen:
Een reactie posten