[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 12:13.42 PM GMT ]
நேற்று இடம் பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் பின்னர் அமைக்கும் அடுத்த அரசாங்கத்திற்கும் 06 மாத காலம் மாத்திரமென குறித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2016ஆம் ஆண்டின் மத்திய பகுதி வரையில் நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியான மோசமான கிரக நிலை இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
கல்வி பற்றிய கருத்தை தெரிவிக்கும் போதும் இனவாதி முத்திரையே குத்தப்படுகின்றது: த.கலையரசன்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 12:59.26 PM GMT ]
“கல்வியால் உலகை வெல்வோம்” எனும் குறிக்கோளுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனின் தொடர் நடவடிக்கையில்,
நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நினழ்வானது, “மறுவாழ்வு கனடா நிவாரணப் பணி” அமைப்பின் அனுசரணையுடன் மத்தியமுகாம் கண்ணகி வித்தியாலயத்தில் அதன் அதிபர் செல்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் குணரெட்ணம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கமலதாசன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கலையரசன்,
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் த.தே.கூட்டமைப்பினராகிய நாங்கள் இப்படியான பாடசாலைகளுக்கு எமது இனத்திற்கு உதவி வழங்குவதற்கு கூட வர முடியாத நிலை இருந்தது.
ஒரு வேளை நாங்கள் அவ்வாறு வந்து உதவிகள் வழங்க முன்வந்திருந்தோமானால் மறு நிமிடமே தொலைபேசி மூலமோ, அல்லது தரகர்கள் மூலமோ பாடசாலை அதிபர்களை மிரட்டுவது அச்சுறுத்துவதுமான செயல்களே கடந்த ஜனாதிபதி ஆட்சி காலத்தில் நடந்தது.
ஆனால் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு நிலைமை ஓரளவு மாறி இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக மாறியுள்ளது. கிழக்கு மாகாணசபையிலும் இரண்டு அமைச்சர்களை ஏற்று இருக்கின்றது.
எமது மாவட்டத்தை பொறுத்தவரை பாடசாலைகளில் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு இங்குள்ள மேலதிகாரிகள் எல்லாம் மாற்றுச் சமூகமாக இருப்பதால் அவர்களும் நிவர்த்தி செய்வதற்கு தயாராக இல்லை. இப்படியான விடயங்களை நாம் வெளியே பேசுகின்ற போது எம்மை இனவாதிகளாகவே காட்டமுற்படுகின்றனர்.
நாம் எமது இனத்தின் பிரச்சினைகளை வெளியே கொண்டுவர வேண்டியது எமது கடமை. அதுவும் எல்லா வழிகளாலும் அடக்கு முறைக்குள்ளான எமது சமூகத்தின் கல்வியிலும் நிறையவே குறைபாடுகள் இருப்பதை பார்த்து கொண்டு இனியும் நாம் மௌனமாக இருந்துவிட முடியாது.
தற்போது கிழக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சராக எமது கட்சியை சார்ந்தவர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் எமது மாவட்ட பாடசாலைகளிலுள்ள குறைபாடுகளை கொண்டு செல்வோம் என்பதை மட்டும் இந்த இடத்தில் உறுதியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
புலம்பெயர் உறவுகள் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கான உதவிகளை செய்து வருவதுடன் எமது மாணவச்செல்வங்களை கல்வியிலும் எமது கலை கலாச்சாரங்களிலும் முன்னேற்ற வேண்டுமென்ற நோக்குடன் தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று “மறுவாழ்வு கனடா நிவாரணப் பணி” அமைப்பினூடாக இந்த கற்றல் உபகரணங்களை உங்களுக்கு வழங்குகின்றேன்.
தொடர்ந்தும் இனிவரும் காலங்களிலும் எமது எதிர்கால மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செய்வதற்கு திடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryD.html
Geen opmerkingen:
Een reactie posten