தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய தகவல்களை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி



ஹற்றனில் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டங்கள்!
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 08:39.46 AM GMT ]
சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பேரணியும் விழாவும் இன்று ஹற்றனில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம்,
விசேட அதிதியாக கண்டி உதவி இந்திய தூதுவர் செல்வி. ராதா வெங்கட ராமன், சிறப்பு அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சர். புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா மற்றும் சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq6H.html

பீல்ட் மார்ஷல் பதவியை கோத்தாவிற்கும் வழங்க கோரும் பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 08:40.59 AM GMT ]
பீல்ட் மார்ஷல் பதவியை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
யுத்த காலகட்டத்தின் போது இராணுவ படைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டதனால் குறித்த பீல்ட் மார்ஷல் பதவி முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கே வழங்கப்பட வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் யுத்தத்தை நிறைவு செய்வதற்காக கடமை புரிந்த முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கும் முன்னாள் விமான படை தளபதி ரோஷான் குணதிலக்கவிற்கும் இவ் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் அதியுயர் பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றதோடு இலங்கையில் பீல்ட் மார்ஷல் தரத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேசையில் பத்திரிகைகளை விரித்து நித்திரை கொண்ட ஜனாதிபதி மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 09:16.57 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு துன்பத்தை அனுபவித்தவர்களை கண்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானும் ஒரு காலத்தில் மேசையில் பத்திரிகைகளை விரித்து படுத்து உறங்கியிருக்கின்றேன். எனினும் பண்டாரநாயக்க நாட்டுக்காக பாரிய வேலைகளை செய்துள்ளார். கட்சிக்குள்ளேயே அவரை கொலை செய்யும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  அப்படியானால், கட்சிக்குள் எந்தளவில் சூழ்ச்சிகள் இருந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
1974 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையான காலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்நோக்கிய மிகவும் கடினமான காலம்.
நாடு என்ற வகையில் நாம் தனித்தனியாக பிரிந்திருக்கும் போது எமது நாடு குறித்து உலக வல்லரசுகள் கவனம் செலுத்தும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பிரிவு அலுவலகம் ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlq6J.html

ஜனாதிபதி மைத்திரியை விட பிரதமர் ரணில் பலம் வாய்ந்தவர்: சாகல ரத்ணாயக்க
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 10:55.03 AM GMT ]
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட பலம் வாய்ந்தவராக இருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம், பொது மக்களின் தனிபட்ட பொருளாதாரம் போன்றவற்றின் அபிவிருத்தியை மேம்படுத்துவதோடு நாட்டை புதிய வழியில் கொண்டு செல்வதற்காக செயற்படுவோம்.
மேலும் தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட அதிக பலம் வாய்ந்தவர் பிரதமர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் அணி திரண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய தகவல்களை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 11:52.07 AM GMT ]
தமது ஆட்சிக்காலத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முட்டாள்தனமான வேலைகள் காரணமாகவே  ஐரோப்பா, இலங்கையில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜித தந்திரமான திருடன். அவரது பிள்ளைகளின் விடயங்களை பயன்படுத்தி ராஜிதவை விமர்சிக்க தேவையில்லை.
குறிப்பாக சொன்னால், ராஜிதவின் முட்டாள்தனமான வேலை காரணமாகவே ஐரோப்பா, இலங்கையில் இருந்து மீன் இறக்குமதி செய்வதை நிறுத்தியது.
சீன டோலார் படகுகள் இலங்கையின் தேசிய கொடிகளை பறக்கவிட்டு, இலங்கை கடலில் மீன்பிடிக்க ராஜிதவே அனுமதி வழங்கினார்.
சீனர்களுடன் இணைந்து பில்லியன் கணக்கான பணத்தை அவர் உழைத்துள்ளார்.
சீனாவுடன் எமக்கு இருக்கும் நெருக்கம் காரணமாக அவற்றை பிரச்சினையாக்க முடியாது. மீன்பிடி அமைச்சராக இருந்த மகிந்த விஜேசேகரவிட அதிகம் உழைத்தவர் ராஜித.
பொதுபல சேனவை பயன்படுத்தி நாம் ராஜிதவை விமர்சித்த போது, என்னிடம் வந்த அவர், ஞானசார தேரரிடம் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு என்னை கும்பிட்டு கேட்டார்.
பின்னர், நான் கோத்தபாய கொண்டு பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுத்தேன் என ராஜித சேனாரத்னவின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து விரிவான விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார்.
ராஜிதவை சிக்கவைக்க முயற்சித்தோம் பசில் அதற்கு இடமளிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள்.
ராஜிதவே இறுதியில் பசிலை அமெரிக்காவுக்கு அனுப்பியனர். பசில் ராஜிதவை காப்பாற்றினார், இறுதியில் ராஜித பசிலை காப்பற்றினார் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி,
ராஜிதவின் மகன் சம்பந்தமான பிரச்சினை ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு தெரியவந்தது. அது பற்றி நாங்கள் விசாரணை நடத்துவதாக அறிந்து கொண்ட ராஜிதவின் மனைவி சுஜாதா, சம்பந்தப்பட்ட பெண் தங்களுடன் இருக்கும் புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் பிள்ளை ராஜிதவின் மகனுடன் இருக்கின்றது. நாங்கள் கைவிட்ட பிரச்சினையைதான் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தூக்கி பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சுஜாதா சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதியிடம் கொடுத்த சில புகைப்படங்களையும் அவர் தன்னை சந்தித்த ஊடகவியலாளர்களிடம் வழங்கியுள்ளார்.
அந்த புகைப்படங்களே இன்று ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryA.html

Geen opmerkingen:

Een reactie posten