தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

தற்போதைய அரசாங்கத்தின் 5 முக்கியஸ்தர்களுக்கு ஆபத்தா?

ஜனாதிபதி தேர்தலின் போது தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 02:14.05 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வாக்கை செலுத்திய பின்னர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இரகசியமாக இரவோடிரவாக குருநாகலில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்கு சென்று மறைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடைய நெருங்கிய நண்பரின் தென்னந்தோட்டத்திலேயே அப்போதைய பொதுவேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தமது குடும்பமே அழிக்கப்பட்டிருக்கும் என்று மைத்திரிபால பிபிசிக்கு செவ்வி ஒன்றை அளித்திருந்தார்.
இதன் பின்னணி செய்தியையே இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குருநாகல் நகரில் இருந்து தூரத்தேயுள்ள தொடங்கஸ்லந்த என்ற தென்னந்தோட்டத்துக்கு மைத்திரிபால குடும்பத்தினர் இரவோடிரவாக சென்றனர்.
இதன்பின்னர் தேர்தல் முடிவு வெளியானதன் பின்னரே மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு திரும்பியதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr6E.html

தற்போதைய அரசாங்கத்தின் 5 முக்கியஸ்தர்களுக்கு ஆபத்தா?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:32.23 AM GMT ]
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை கேலி செய்த தற்போதைய அரசாங்கத்தின் 5 முக்கியஸ்தர்கள் தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.
முன்னாள் பிரதமர் 1980ம் ஆண்டு ஹற்றனிலுள்ள தோட்ட அதிகாரியின் விடுதிக்கு சென்ற போது 5 பிரமுகர்களை அவரை கேலி செய்துள்ளனர்.
பின்னர் அவர் பொலிஸில் முறையிட்டதன் பின்னர் ஹற்றன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகள் என நிரூபித்த போதிலும் குறித்த ஐவரும் தண்டனையை அனுபவிக்காமல் தாம் செய்த தவறிற்கு மன்னிப்பு கோரி தண்டனையிலிருந்து தப்பித்து கொண்டுள்ளனர்.
குறித்த ஐவரும் தற்போதைய அரசாங்கத்திலுள்ள மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் காணப்படுகின்றனர்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஹற்றன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 1980ம் ஆண்டின் ஆதாரங்களை திரட்டி வருவதற்காக ஹற்றன் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதுடன்,
இந்த குற்றங்களை ஆதாரங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முனைந்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7D.html

Geen opmerkingen:

Een reactie posten