[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 01:20.05 AM GMT ]
அண்மையில், கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகள் விபச்சார தொழில்களில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த வேளையில், குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதிகள் லாகூரில் உள்ள ஆட்கடத்தல்காரர்களிடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் படியே இலங்கைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவையை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த உடன்படிக்கை என்று கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த ஆட்கடத்தல்காரர்கள் இலங்கையில் தற்போது தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 02:25.10 AM GMT ]
இதன்படி 15 ஆயிரம் அரசாங்க மருத்துவர்கள் அன்றைய தினம் கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்று அரசாங்க மருத்துவ சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை, பேராதெனிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் மருத்துவமனை, மஹரகம புற்றுநோய் மருத்துவமனை, காசல் மற்றும் டி சொய்ஸா பிரசவ மருத்துவமனை என்பவற்றின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கமாட்டார்கள்.
தேசிய மேலதிக கொடுப்பனவு முறை மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
மருத்துவர்களுக்கு போக்குவரத்து மேலதிக கொடுப்பனவு 25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். மாதாந்த மேலதிக கொடுப்பனவு 750 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பன அரசாங்க மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr6F.html
உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த இலங்கைத் தூதுவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 02:31.10 AM GMT ]
உதயங்க, உக்ரேனின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகப் பணிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் தலைநகர் கீவ்வில் உதயங்க வீரதுங்க தங்கியிருந்தார். அத்துடன் கிளப் லங்க என்ற விருந்தகத்துக்கும் உரிமையாளராக இருந்தார்.
வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மருமகன் என்ற வகையிலேயே உக்ரேனுக்கான தூதுவர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அரசியல் நியமனம் என்ற அடிப்படையில் அவர் புதிய அரசாங்கத்தினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு தலயாத்திரை செல்வோருக்கு முன்னெச்சரிக்கை!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 02:52.13 AM GMT ]
இந்தியன் ஸ்வைன் ப்ளு என்ற இந்த பரவுகை காரணமாக 2000 பேர் இந்தியாவில் மரணமாகியுள்ளனர்.
31 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் யாத்திரை செல்லும் முதியோர்களே இந்த விடயத்தில் கவனமாக செயற்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளனர்.
இலங்கை யாத்திரிகர்கள் தமது பயணங்களின் போது மக்கள் பெருமளவில் கூடியிருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையிலும் இந்த நோய் தொற்று 2009ஆம் ஆண்டின் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr6H.html
தேர்தல் தோல்வியின் பின்னர் இந்தியா செல்லும் மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 03:09.08 AM GMT ]
இந்த விஜயத்தின் போது இந்திய அரசியல் தலைவர்கள் பலரை மஹிந்த சந்திக்க உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவின் சில மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மஹிந்த ராஜபக்ச செல்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயம் பற்றிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது தேர்தல் தோல்விக்கு இந்திய உளவுப் பிரிவான றோ உள்ளிட்ட தரப்பினர் முக்கிய பங்காற்றியதாக மஹிந்த குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் 30 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைவு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 03:17.14 AM GMT ]
இதன்படி இந்த 30 பேரில் 15 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 15 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைய இன்னும் ஒருமாதம் இருக்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கான அமைச்சர்கள் பட்டியலில், எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்கை, அநுர பிரியதர்சன யாப்பா அடங்கவில்லை.
இதன்பின்னர் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 44 ஆக உயரவுள்ளது. ஏற்கனவே உள்ள 13 பிரதியமைச்சர்களும், 15 மேலதிக பிரதியமைச்சர்கள் இணைகின்றனர்.
இதனையடுத்து தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை 23ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து இராஜாங்க அமைச்சர்கள் 10 பேரை நியமிப்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போதுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும் சாத்தியங்கள் உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டால், அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகாரங்களை நீக்குவது தொடர்பான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தரப்பினரே வற்புறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளது.
இவர்களில் 10 பேர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr6J.html
ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 03:27.00 AM GMT ]
மரணத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய எனது கணவர் வடக்கு போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
போர் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய ஏனைய படைத்தளபதிகள் பீல்ட் மார்ஷல் பதவி கேட்பது பொருத்தமற்றது.
எனது கணவர் எதிர்நோக்கிய சவால்களை ஏனைய படைத் தளபதிகள் எதிர்நோக்கவில்லை.
பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. சில நாடுகளில் பீல்ட் மார்ஷல்கள் ஜனாதிபதிகளாக கடமையாற்றியுள்ளனர்.
நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எந்தப் பதவியும் தடையாக அமையாது என அனோமா பொன்சேகா கொழும்பு பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தலைமையில் கொழும்பில் இன்று நடைபெறும் நிகழ்வில் ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட உள்ளார்.
பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் பதவி உயர்த்தும் நிகழ்வு இன்று!
ஜனநாயக கட்சி தலைவரும் பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அமைச்சர்,உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
உயரிய பதவியான பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு நிகழ்வை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விசேட அடையாள சின்னமொன்றையும் கையளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
1970ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக சேவையாற்றி பின் ஓய்வுபெற்றார்.
சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும். நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7B.html
தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரமே பாட வேண்டும்: சரத் வீரசேகர
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:06.58 AM GMT ]
வானொலி நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதனால் தமிழ் மக்களுக்கு தேசிய கீதம் தொடர்பான உணர்வு இல்லாமல் போய்விடும். இதனால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடினால் நாடு குறித்தும் தமிழ் மக்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுமென தெரிவிக்கிறார்கள். அது உண்மையா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், தமிழ் மக்களுக்கு நாடு, தேசிய கீதம் தொடர்பாக உணர்வு வர வேண்டுமென்றால் அவர்கள் தேசிய கீதத்தின் அர்த்தங்களை புரிந்துக்கொள்ள வேண்டும். சிங்கள மொழியில் பல முக்கியமான வார்த்தைகள் கொண்டு தேசிய கீதம் எழுதப்பட்டுள்ளது. எனவே அதனை வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது தவறாகும்.
தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க முடியாதென முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்நெத்தி, அவரின் பெயரை நாங்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தால் சென்ட்ல் வுட் (Sandle wood) நெட்டி என எழுத முடியாது.
அதேபோல் தான் “ஸ்ரீலங்கா மாத்தா” என்பதை ஸ்ரீலங்கா தாயே என்று எப்படி கூற முடியும். ஸ்ரீலங்கா மாத்தா என்று தான் தமிழிலும் பாட வேண்டும். தேசிய கீதத்தை தமிழில் எமுதினாலும் அதன் உச்சரிப்பு சிங்கள மொழியில் தான் இருக்க வேண்டும். எனவே தேசிய கீதம் சிங்களத்தில் தான் பாட வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7C.html
Geen opmerkingen:
Een reactie posten