தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை மீட்க வெளிநாடுகள் உதவி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின்  குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
அப்படி கொள்ளையடித்த பணத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாவை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மஹிந்த கொள்ளையடித்த பணத்தை மீட்டு மீண்டும் திறைசேரியில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.
இதையடுத்து மஹிந்த பதுக்கியுள்ள பணத்தை மீட்க புதிய ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக அவர் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் உதவியை நாடியுள்ளார். இந்த நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எனவே மஹிந்த ராஜபக்சே பதுக்கியுள்ள பணம் பற்றிய விவரம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவின் சட்டவிரோத நிதிக்கணக்குகளை கண்டுபிடிக்க இந்தியாவும் அமரிக்காவும் உதவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளில் வைத்திருந்த பாரிய தொகை பணத்தொகையை கண்டுபிடிக்க இந்தியாவும் அமெரிக்காவும் உதவியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோனோமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத பணம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
டுபாயில் மாத்திரம் இவர்கள் 2 பில்லியன் டொலர்கள் வைப்பை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் 1.064 பில்லியன் டொலர் வைப்பையும் ஏனைய இருவர் 500 மில்லியன் டொலர் வைப்புக்களையும் கொண்டிருப்பதாக இந்திய செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை டுபாயில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் ராஜபக்ச குடும்பம் வெளிநாடுகளில் வைப்பு செய்துள்ள பணத்தின் 20வீதம் மாத்திரமே என்றும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr3B.html

Geen opmerkingen:

Een reactie posten