தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும்: ஜனாதிபதி



யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகை மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் நான் குடியேற மாட்டேன்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையின் பணிகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. இதனை முதல் தடவையாகவே நான் பார்க்கின்றேன்.
இரகசியமான முறையில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டு வந்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmpzG.html

Geen opmerkingen:

Een reactie posten