தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

சிறிலங்காவில் நாளைய தினம் தேசிய அரசாங்கம்?மைத்திரி நாளை யாழ் வருகை!



நாளை யாழ் வருகை தருகின்றார் மைத்திரி! தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் மக்களுக்கு பதில் சொல்வாரா?
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 04:56.16 PM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தருகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கப்படாதுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வலி.கிழக்கு வளலாய் கிராமத்தின் ஒருபகுதியினை இன்றைய தினம் பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாதிருந்த தமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்படுவதாக அறிந்தவுடன், ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் தமது காணிகளை பார்வையிட வந்த மக்கள் காணிகள் தொடர்ந்தும் இராணுவ வசம் உள்ளதனை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்புக்களோடு வந்த மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதனால் அவர்கள் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர்.
புதிய அரசு படிப்படியாக எமக்கு வழங்கி வரும் நன்மைகளினை நாம் வரவேற்கும் அதேவேளை எமது மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் புதிய அரசு தொடர்ந்தும் முன்னெடுத்தால் அரசிற்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம்.
வளலாயில் ஒரு பகுதி நிலங்கள் விடுவிக்கப்படாது உள்ளதோடு, அவற்றில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டேயுள்ளது. இதே போல் வசாவிளான் ஒட்டகப்புலத்தினை நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடமாக கொண்டுள்ள போதிலும், இருபத்தியிரண்டு குடும்பங்களே அங்கு ஜனாதிபதியால் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இதே போன்ற நிலைமை தான் ஏனைய பகுதிகளிலும் உள்ளது.
இதுதவிர தற்போது மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலே பற்றைகள் சூழ்ந்த தமது காணிகளை துப்பரவு செய்து வருக்கின்றனர்.
இம்மக்களிற்கு அடிப்படை வசதிகளினை யாழ்.வரும் ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மேலும் இம்மக்கள் தொடர்பில் நாமும் விசேட கவனம் செலுத்தி உதவிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
தமது நலன்களுக்காக மக்கள் ஏமாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு தொடர்ந்தும் எமது மக்களினை புதிய அரசும் தொடந்தும் ஏமாற்றுமானால் அதனை நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
வளலாய் மக்களினை பார்வையிட்டு கலந்துரையாடிய பின்னர் வசாவிளான் மக்களினையும் சென்று பார்வையிட்டிருந்தார்.
வசாவிளான் மக்களினை சென்று பார்வையிட்ட போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்களின் போது மக்கள் மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள், காணிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தன.
இச்சந்திப்புக்களின் போது இராணுவம் உள்ள இடங்களில் இராணுவத்தோடு சேர்ந்து வாழ முடியாது எனவும்
இராணுவத்தினை தமது இடங்களை விட்டு அப்புறப்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr5D.html

சிறிலங்காவில் நாளைய தினம் தேசிய அரசாங்கம்?
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 05:17.26 PM GMT ]
நாளையதினம் சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இடையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நாளையதினம் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு 15 அமைச்சுப் பதவிகளும், 10 பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன.
திங்கட் கிழமை அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr5E.html

Geen opmerkingen:

Een reactie posten