[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 11:41.19 AM GMT ]
இந்த கப்பல் நேற்று இந்த நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
303 பாகிஸ்தான் கடற்படையினருடன் விஜயம் செய்துள்ள சுல்பிகார் எனும் குறித்த யுத்த கப்பல் 123 மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது. திருகோணமலையை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
இதன்படி பாகிஸ்தான் யுத்த கப்பலின் தளபதி கெப்டன் அமீர் முஹம்மட் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரோகண பெரேராவை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்: கிழக்கு முதலமைசர்- யுனிசெப் பிரதிநிதிகள் கிழக்கு முதல்வர் சந்திப்பு
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 11:44.19 AM GMT ]
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் செயற்பாடு புதிய உதயத்தினை உருவாக்கியுள்ளது. இந்த உதயம் நமது நாட்டை புதிய எழுச்சிக்கும் உச்சத்திற்கும் கொண்டு செல்லுமளவிற்கு நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தாய்நாட்டின் சுபீட்சத்தினை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதில் கிழக்கு மாகாண சபை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் கைகோர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.
நமது இலங்கை அரசாங்கம் நாடு முழுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளதோடு பன்மைத்துவ அரசியல் செயன்முறை மற்றும் சிவில் நிருவாகத்தை தாபிப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் முக்கியத்துவமிக்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான உகந்த சூழலையும் எல்லா அத்தியாவசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
20 வருடங்களுக்குப் பிறகு மே மாதம் 2008 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கான மாகாண சபை தாபிக்கப்பட்டதை தொடர்ந்து பல உட்கட்டுமான செயற்திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் சிறந்த வகையில் முன்னேற்ம் கண்டுள்ளது.
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் முன்கொண்டுசெல்லப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் நியாயமான அளவு வெற்றி கண்டுள்ளது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.
நல்லாட்சி நடைபெறுவதினூடாக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தங்களது முயற்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் எனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறேன்.
யுத்தம் முடைவடைந்த கடந்த 5 வருட காலப்பகுதியில் கிழக்கு மாகாணமானது உட்கட்டமைப்பு அபிவிருத்தியினூடாகவும் அதிகரித்த பொருளாதார வெளியீடுகளூடாகாவும் விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
அண்மைக்காலங்களில் கிழக்கின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நவீனத்துவத்தை அடைந்துள்ளதுடன் தற்போது இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் மாகாணம் என்ற நற்பெயரையும் பெற்றுள்ளது. இதனை சாத்தியப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம், சர்வதேச கொடை வழங்கும் முகவர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்கு நன்றியுடன் நினைவுகூரத்தக்கது.
அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்ற இருண்ட காலம் தற்போது முடிவடைந்து மாகாணத்திலுள்ள அனைத்து இனங்களும் மாகாணத்தின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற பொதுவான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
தங்களது வழிகாட்டுதலுடனும், உதவிகளுடனும் எமது மாகாணம் துரிதமான, நிலைபேறான அனைத்தும் உள்ளடங்கலான அபிவிருத்தியை நோக்கி நகரும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு
யுனிசெப் அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைகான பிரதி வதிவிட பிரதிநிதி டாக்டர் போலாபலன்சியா தலைமையிலான தூதுக்குழு கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ்நசீர் அஹமட்டை இன்று திருகோணமலை முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது கிழக்குமாகாண சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பான சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதன் முன்னேற்றத்திற்கான வழிகளை அமைத்து கொடுப்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp3F.html
வவுனியாவில் ரெலோ உறுப்பினர் சுட்டுக் கொலை- தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 11:57.16 AM GMT ]
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வவுனியா வைரவ புளியங்குளத்தை சேர்ந்த 45வயதுடைய வடிவேல் அழகன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தின் அருகில் வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் கைப் பை ஒன்றும் மீட்கப்பட்டதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நபர், ரெலோ அமைப்பின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் முன்னர் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர் வவுனியாவில் சன்ரீவி மீள்ஒளிபரப்பு நிலையத்தை முன்னர் நடத்தி வந்துள்ளார். தற்போது வைரவ புளியங்குளத்தில் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இரவு எங்கள் வீட்டுக்கு அண்மையில் வாகனச் சத்தம்கேட்டது. அதன் பின் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் கேட்டன. காலையில் பார்த்த போதே வீதியில் ஒருவர் இறந்து கிடந்தார் என குறிப்பிட்டுள்ளனர்.
வவுகியா பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
இந்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கநகை கொள்ளை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டினையடுத்தே குறித்த நபர் கைது செய்யபப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கூரிய ஆயுதம் ஒன்றினை காட்டி வீட்டாரை பயமுறுத்தியுள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய கூமாங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் இவ்வாறான பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp3G.html
Geen opmerkingen:
Een reactie posten