தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

தமது இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தினார் மோடி



முஸ்லிம் கட்சிகள் இனத்துவ அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் கோத்தபாய உறுதியாக இருந்தார்: எம்.நிஸாம் காரியப்பர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 04:17.36 PM GMT ]
சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கரைவாகு வயல் பகுதியில் ஒரு தொகுதி காணியை நிரப்புவதற்காக தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும் கட்டத்திற்கு வந்திருப்பதாக..
..கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
சாய்ந்தமருதின் புதிய நகரமயமாக்கல் திட்டம் மற்றும் காணி நிரப்புதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 800க்கு மேற்பட்ட காணிச் சொந்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் உரையாற்றுகையில்,
"எமது கல்முனைத் தொகுதியில் சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற பிரதேசங்களில் புதிதாக வீடமைத்து குடியிருப்பதில் மக்கள் பாரிய நிலத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதை அறிந்து, கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது எனது விஞ்ஞாபனத்தில் காணி நிரப்பும் பிரச்சினையை உள்ளடக்கியிருந்தேன்.
அதன் பிரகாரம் பிரதி முதல்வராக தெரிவானது தொடக்கம் அதற்கான தீவிர முயற்சிகளிலும் போராட்டங்களிலும் நான் ஈடுபட்டு வந்துள்ளேன். அதனை வெற்றி கொள்வதில் நான் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தேன்.
அப்போது நகர அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அந்த அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவும் பதவி வகித்தனர்.
இந்த அதிகாரத்தின் மூலம் நகர அபிவிருத்தி அதிகார சபையை கையில் வைத்துக் கொண்டே கொழும்பு மாநகரத்திற்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.
அந்த வகையில் எமது மக்களின் குடியிருப்புக்கான நிலப் பிரச்சினை தொடர்பில் நான் கோத்தபாய ராஜபக்சவையும் உயர் மட்ட அதிகாரிகளையும் பல தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, கடுமையாக போராடி வந்தேன். அதன் பயனாக 50 ஏக்கரை நிரப்புவதற்கான அனுமதியைத் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை. குறைந்தது 300 ஏக்கருக்காவது அனுமதி தரப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றேன். அதற்கு 150 ஏக்கருக்கு முயற்சிப்போம் என்று சொன்னார்கள். அப்போது கோத்தபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளும் எந்தவொரு திட்டத்திற்கும் அமைச்சரவை அனுமதி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் எமது விடயத்தில் அவர் இறுக்கமாக இருந்தார்.
ஏனென்றால் அவர் என்னிடம் நேரடியாகவே சொன்னார்; நீங்கள் இனவாதக் கட்சி நடத்துகின்றீர்கள், இனவாதம் பேசுகின்றீர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியில் இருக்கும் முஸ்லிம் எனும் பதத்தை நீக்கி விட்டு வாருங்கள் அல்லது நீ அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி எம்முடன் வந்து இணைந்து கொள்ளுங்கள், நீங்கள் கேட்பதை எல்லாம் செய்து தருகின்றேன். 300 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான அனுமதியை மாத்திரமல்ல, அதற்கான பாரிய இயந்திரத் தொகுதியையும் மற்றும் உண்டான உதவிகளையும் தருகின்றேன் என்று வற்புறுத்தினார்.
நான் சொன்னேன்; நாம் இனவாதம் பேசவில்லை. அதற்காக கட்சி நடத்தவில்லை. உங்கள் போன்ற தலைவர்கள் சிறுபான்மையினரை இன ரீதியாக புறக்கணித்து மேலாதிக்கம் செய்வதாலேயே நாம் ஒரு இனத்துவக் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்று கூறினேன். நீங்கள் இனவாதி என்று கூறுகின்ற மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் உறவினர்தான் நான் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.
அதாவுல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோர் போன்று நாமும் எமது கட்சியின் பெயரில் முஸ்லிம் இனத்துவ அடையாளத்தை நீக்கியிருந்தால் நாம் கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும். ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தில் எமது கட்சிக்கு உரிய அந்தஸ்த்தும் அதிகாரமும் கிடைத்திருக்கும். கல்முனையும் பாரிய அப்விவிருத்தியைக் கண்டிருக்கும்.
இந்த நாட்டில் முஸ்லிம் கட்சிகள் எதுவும் இனத்துவ அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் கோத்தபாய உறுதியாக இருந்தார். அதற்காக எதையும் தருவதற்கு அவர் தயாராக இருந்தார். நான் அசைந்து கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் கோத்தபாயவுக்கு அஞ்சவில்லை. அவரது அதிகாரத்திற்கு அடிபணியவில்லை. அவரால் தரப்படும் எனக் கூறப்பட்ட சலுகைகளுக்கு சோரம் போகவில்லை.
நாட்டுத் தலைவர்கள் என்ற ரீதியில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டிய கடப்பாடு உங்களுக்கு இருக்கிறது என்று நான் அவரிடம் அடித்துக் கூறினேன். இப்படியொரு இக்கட்டான அரசியல் சூழலுக்குள் நின்று கொண்டே இக்காணிப் பிரச்சினைக்காக நான் போராடி வந்தேன்.
இதற்கிடையில் பொதுபல சேனாவின் பிரச்சினையும் தலைதூக்கி விட்டது. அதையும் இந்த கோத்தபாயவே செயற்படுத்தி வந்தார் என்பதால் அவரை சந்திப்பதிலும் உறவைப் பேணுவதிலும் எனக்கு சிக்கல் இருந்தது. அதனால் தேசிய ரீதியில் விஸ்பரூபம் எடுத்த சமூகப் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுத்தேன்.
இந்த சூழ்நிலையிலேயே ராஜபக்ச சாம்ராஜ்யம் வீழ்ந்து நல்லாட்ட்சி மலர்ந்தது மட்டுமல்லாமல் அவர்கள் வைத்துக் கொண்டு எம்மை ஆட்டிப் படைத்த நகர அபிவிருத்தி அமைச்சே எமது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அமைச்சுப் பதவியை பாரமெடுத்த கையேடு எமது நகரமயமாக்கல் திட்டத்தையும் காணி நிரப்புவதற்கான நடவடிக்கையையும் விரைவில் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4C.html

ஜெயக்குமாரி அடுத்தவாரம் விடுவிக்கப்படுவார்?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 04:25.20 PM GMT ]
இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
போரின் போது தமது மகன் காணாமல்போனமையை அடுத்து, காணாமல் போனோர் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது ஜெயக்குமாரியும் அவரது மகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை வந்தபோதும் அவர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்தநிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண முயற்சியின் அடிப்படையில் ஜெயக்குமாரி விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



வான் மோதியதில் சிறுமி பலி- வானைத் தீயிட்டுக் கொழுத்திய பொதுமக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 04:53.45 PM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை  தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.


தமது இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தினார் மோடி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 04:40.12 PM GMT ]
இலங்கைக்கான தமது விஜயம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மொரீசியஸ், சீசெல்ஸ் மற்றும் இலங்கை போன்ற நட்பு நாடுகளுடன் சிறந்த உறவை காணவிரும்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் விஜயம் குறித்து மோடி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.  இலங்கைக்கான தமது விஜயம், சந்தோசமானதாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தாம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதுடன், மகாபோதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 28வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமராக மோடி, எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms4E.html

Geen opmerkingen:

Een reactie posten