இது ஒருபுறம் இருக்க , சாதாரண பிளேனில் வந்தாலும் நாளை(09.03.2015) சங்கு ஊதியே தீருவோம் என்று பிரித்தானிய தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. நாளை திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பிரித்தானியாவில் உள்ள காமன்வெலத் அலுவலகத்திற்கு மைத்திரி வருகிறார். அவரை மகிந்தபோன்று மக்கள் தீவிரமாக எதிர்காவிட்டாலும், இலங்கையில் உடனே பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று கூறி பாரிய கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை நடத்தவுள்ளார்கள் பிரித்தானிய தமிழர்கள். நேற்று இரவு(08) லண்டன் வந்தடைந்த மைத்திரியுடன், பிரித்தனியாவுக்கான முன் நாள் தூதுவர் கிறிஸ் நோனிஸ் உடன் வந்துள்ளார். மைத்திரிக்கு ஆங்கில அறிவு மிக மிக குறைவு என்று அறியப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் ஆங்கிலம் நன்கறிந்த கிறிஸ் நோனிசை உடன் அழைத்து வந்துள்ளார்.
மேலும் இன்று இரவு(08.03.2015) 2 விருந்துபசாரங்கள் நடைபெறுகிறது. ஒன்று சிங்களவர்களோடு. மற்றையது தமிழர்களோடு. இதில் கலந்துகொள்ள ,நான் ..நீ ..என சில தமிழர்கள் முண்டியடிக்கிறார்கள். அதிலும் சில பண முதலைகள் தாம் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாகவும் எனவே மைத்திரியை சந்திக்க வாய்ப்பு தரவேண்டும் என்றும் தேவாங்குகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மைத்திரிக்கு லண்டனில்கட்சி ஆபீஸ் திறந்துகொடுத்த தேவாங்குகளை மைத்திரி இதுவரை திரும்பியும் பார்கவே இல்லை. இன் நிலையில் இவர்கள் பின்னால் ஒரு கூட்டம் அலைந்து திரிகிறதுமைத்திரியை பார்த்துவிடவேண்டும் என்று. எப்படி என்றாலும் ஒரு செல்ஃபி எடுத்துவிடவேண்டும் என்றுஅவர்களுக்கு ஒரு ஆசை. இது தான் இன்றைய லண்டன் நிலவரம் போங்கள் !
http://www.athirvu.com/newsdetail/2496.html
Geen opmerkingen:
Een reactie posten