தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய 3 மாத கால அவகாசம் தேவை!– மஹிந்த தேசப்பிரிய
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:25.43 AM GMT ]
தேர்தல் முறைமையில் மாற்றம் செ;யய குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையாளர் நேற்று இது குறித்து அறிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு இடையில் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது
நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் கடமையாற்றினால் மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
சிறு கட்சிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களிலும் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:36.56 AM GMT ]
பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை முன்னறிவித்தல் எதுவுமின்றி அவர்களின் விருப்பத்துக்கு மாறாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக சட்டத்தரணி கே. எஸ். ரத்னவேல் நேற்று தெரிவித்தார். 
எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலம் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் 10 பேர் 15 பேர் என நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இது சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்த சட்டத்தரணி ரத்னவேல் இது தொடர்பாக தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள் கவனிப்பதாக தெரியவில்லை என்றும் கூறினார்.
கிளிநொச்சி ஜெயகுமாரி நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது அவருக்கு சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று ஜெயகுமாரியை நீதிமன்றத்துக்கு ஆஜராக்குவதாக கூறப்பட்ட போதும் அவருடன் 6 பெண்கள் உட்பட 13 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் 8 பேர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனையோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmuzF.html

Geen opmerkingen:

Een reactie posten