தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

யாழ்.அக்கரைக் கிராமத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் விஜயம் - இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சுவிட்சர்லாந்து

100 நாள் வேலைதிட்டத்தில் முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது: அரசாங்கம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 07:58.09 AM GMT ]
19வது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தின் முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
19வது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி தற்பொழுது வெளியிடப்பட்டது.
19வது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி விரைவில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டு அமுலுக்கு வருமென திட்டமிடல் கொள்கை பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp3B.html


யாழ்.அக்கரைக் கிராமத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் விஜயம் - இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சுவிட்சர்லாந்து
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 08:00.13 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வளலாய் அக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் சுவிஸ் வீட்டுத்திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த பகுதியில் சுவிஸ் அரசாங்கத்தினால் தலா ஐந்து லட்சத்து 50ஆயிரம் ரூபா செலவில் சுமார் 35 வீடுகள் மற்றும் ஒரு சனசமூக நிலையம் மற்றும் ஒரு முன்பள்ளி ஆகியன அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதனையே வெளிவிவகார அமைச்சர் பார்வையிட்டுள்ளார். இதன்போது அப்பகுதி மக்கள் அமோகமான வரவேற்பினை அமைச்சருக்கு வழங்கியிருக்கின்றனர்.
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம்
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறுவப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டைடர் புர்காட்லர் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்திற்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை புதிய அரசாங்கம் காண்பித்து வரும் அக்கறை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதன் மூலம் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு மாத்திரமின்றி அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஆதரவை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் கோரிய 45000 திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp3C.html

Geen opmerkingen:

Een reactie posten