தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் தாமதிக்க வேண்டாம்: பிரித்தானியா வலியுறுத்து

வடக்கு - கிழக்கில் இரகசிய முகாம்கள் இல்லை: பிரதமர் ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 05:30.15 AM GMT ]
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரகசிய முகாம்கள் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான இரகசிய முகாம்கள் எதுவும் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இரகசிய முகாம்கள் காணப்படுவதாக ஓர் நிலைப்பாடு காணப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆனால் நாங்கள் கூறினோம் கடற்படையினருடையதோ அல்லது வேறும் தரப்பினருடையதோ முகாம்கள் கிடையாது. அப்படி எங்காவது இருக்கின்றது என்றால் அதனை வந்து பார்வையிட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் உயிரிழந்து அல்லது நாட்டை விட்டுவெளியேறி இருக்கலாம் என எண்ண வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2008ஆம் ஆண்டில் கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கோடாபே என்னும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனோர்களின் பெற்றோர்கள் முன்வைத்த மனுவை பரிசீலினை செய்ததன் பின்னர் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய இவ் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo2J.html


நான் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவன் இல்லை: சோபித தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 06:06.59 AM GMT ]
அரச உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் அங்கத்துவம் வகிக்கவும் இல்லை, இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை என சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றேன் என ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கின்றன.
நான் அவ்வாறு அங்கத்துவம் வகித்திருந்தால் எனக்கு அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.
எனினும் எனக்கு அது தொடர்பில் எந்தவிதமான அழைப்புக்களும் இதுவரை விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தான் தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம் வகிப்பதாக யாரும் தவறாக கருதக்கூடாது எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் தாமதிக்க வேண்டாம்: பிரித்தானியா வலியுறுத்து
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 07:40.00 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டெம்பருக்கு பின்னரும் காலம் தாமதிக்க கூடாது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ.நா மனித உரிமை பிரதிநிதிகளினால் இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாதம் அறிக்கை சமர்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கை குறித்ததான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிப்பதற்கும், அது குறித்த விவாதத்தையும் ஒத்திவைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை அறிக்கை வெளியிடுவதை செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரும் தாமதிக்க கூடாது எனும் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்தார்.
ஜெனீவாவில்  ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் சில நாடுகளால் அலட்சியம் செய்யப்படுவதுடன், தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சில தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாக சிலர் கூறிக்கொள்வதாகவும் ஹுசைன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் ஐ.நா உறுப்பு நாடுகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு குறித்து சில நாடுகள் காண்பித்த அலட்சியம் மற்றும் அவமதிப்புத் தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள் தன்னிச்சையாக உருவாக்கப்படுபவையல்ல. நாடுகள் தெரிவு செய்யும் கொள்கைகளின் காரணமாகவே மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. சில நாடுகளின் கொள்கைகள் சுதந்திரம் மற்றும் பங்கெடுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைவதாகவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo3J.html

Geen opmerkingen:

Een reactie posten