தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள கொடி!– கண்டி தலதாமாளிகையில் பதற்றம்!

சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சலாக பதவி உயர்வு வழங்கவுள்ள ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 07:58.26 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்சலாக பதவி உயர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி குறித்த பதவி உயர்வு வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்விற்காக பாதுகாப்பு அமைச்சு தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அதற்கமைய இராணுவத்தில் அதி உயர் பதவிகளில் ஒன்றாக பீல்ட் மார்சலாக  முதல் முறையாக இலங்கையில் சரத்பொன்சேகா நியமிக்கபடவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்திற்கு சரத் பொன்சேகாவே தலைமை தாங்கியிருந்தார்.
எனினும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் சரத் பொன்சேகா தனது பதவிகளை இழந்ததுடன் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சரத் பொன்சேகா இழந்த அனைத்து பதவிகள் மற்றும் வரப்பிரசாதங்களும் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றும்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:13.09 AM GMT ] [ வலம்புரி ]
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி மைத்திரிக்கு ஆரோக்கியமானதல்லதாயினும் தேர்தலின் போது, தான் வழங்கிய வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு பாராளுமன்றக் கலைப்பும் பொதுத் தேர்தலும் உரிய காலத்தில் இடம்பெறும் என உறுதிபடக் கூறமுடியும்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவை தேர்தலில் போட்டியிடாதவாறு தடுக்கும் வகையில் சில திட்டங்களை மைத்திரி அரசு செய்யும். அதாவது நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­ச  போட்டியிட்டு, பிரதமர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என மகிந்தவின் விசுவாசிகள் விரும்புகின்றனர்.
ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிடுவதா? என்ற கெளரவப் பிரச்சினை இவ்விடத்தில் ஏற்படச் செய்யுமாயினும் மகிந்த ராஜபக்­வைப் பொறுத்தவரை அப்படியான கெளரவப் பிரச்சினைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
மைத்திரிக்கு தலையிடி கொடுப்பதற்காகவேனும் பாராளுமன்ற உறுப்பினராகத் தான் வரவேண்டும் என மகிந்த ராஜபக்ச­  நிச்சயம் நினைப்பார். எனினும் அந்த நினைப்பு நிறைவேறுமா? என்பதுதான் கேள்விக்குரிய விடயம்.
பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச­  போட்டியிடுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினாலும் பிரதமர் ரணில் ஒரு போதும் விரும்பமாட்டார். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த போட்டியிடுவதை தடுப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு.
அதில் ஒன்று, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மகிந்தவைச் சிறையில் அடைத்து, தேர்தலில் போட்டியிடுதல் என்ற நினைப்பை அவரிடம் இல்லாமல் செய்தல். இதைச் செய்யும் போது மகிந்த தரப்பு ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராகக் கடும் பிரசாரம் செய்யும்.
புலிகளை வென்ற சிங்கத்தை சிறையில் அடைத்து வைத்திருப்பது முறையோ! என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் கூப்பாடு போடுவர்.
கூடவே, மகிந்தவை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுகை பெறச் செய்வதே என்ற பிரசாரமும் முழங்கும். எனவே இது ஒரு நல்ல வியூகம் அல்ல என மைத்திரி தரப்பு முடிவு செய்யும்.
இங்குதான் ரணிலின் இராஜதந்திரம் வேலை செய்யும். அதாவது மகிந்த ராஜபக்­சவை பிரதமர் ரணில் சந்திப்பார். சந்தித்து நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்த சொத்துக்கள், உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாங்கள் எதுவும் கண்டுகொள்ள மாட்டோம். இதற்காக நீங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல், அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று கேட்பார்.
என்ன செய்வது? எம்.பியாகுவதை விட, மாபெரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதே மேல் என்று மகிந்த முடிவு செய்வார். அப்படி ஒரு முடிவை ரணில் விக்கிரமசிங்கவினால் நிச்சயம் ஏற்படுத்த முடியும்.
ஆக, எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றுகின்ற அருமருந்தாக அமையப் போகிறது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்ள முடியும்.



தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள கொடி!– கண்டி தலதாமாளிகையில் பதற்றம்!
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 07:52.48 AM GMT ]
கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவ யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.
நேற்று தலதா மாளிகையில் பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து தலதா மாளிகையின் நிர்வாக செயலாளரின் புகாரின் அடிப்படையில் கண்டி பொலிசார் விசாரணைகணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4A.html

Geen opmerkingen:

Een reactie posten