இலங்கையில் நினைத்துப் பார்க முடியாத அளவு பெரும் மோசடிகளைச் செய்து, தமிழ் மக்களை ஏமாற்றி காசு பறித்த ஜோடி தான் இந்த உதயகலா - மற்றும் தயாபர ராஜ். புகைப்படத்தை பார்த்த உடனே உங்கள் நினைவுகள் தூசி தட்டி , அட இவர்களா என்று எண்ணத்தோன்றும். யாழ்பாணம் , முல்லைத்தீவு, வவுனியா என்று பல இடங்களில் தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்த இந்த ஜோடி, உள்நாட்டில் பிசினஸ் போதாது என்று டுபாய்க்கு கூட சென்று அங்கே உள்ள தமிழர்களையும் ஏமாற்றி வெற்றிகரமாக இலங்கை திரும்பினார்கள். அவுஸ்திரேலியா கொண்டுபோய் விடுவதாக கூறி தமிழர்களிடம் லட்சக் கணக்கில் பணத்தை கறந்த இந்த ஜோடி, அவர்களை சிறிய படகுகளில் ஏற்றி ராமேஸ்வரத்தில் உள்ள மண் திட்டிகளில் இறக்கிவிட்டு மாயமாவது வழக்கம்.
இவர்களுக்கும் கோட்டபாயவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஏன் எனில் இலங்கையில் நூற்றுக்கணக்கான பொலிஸ் கம்பிளேன் இவர்கள் மேல் உள்ளது. ஆனால் எந்த சிங்களப் பொலிசும் இவர்கள்மேல் கை வைத்தது கிடையாது. இப்படி இருக்கையில் கடந்த ஆண்டும் இவர் மீண்டும் தனது ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். வெளிநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாக கூறி, ஒரு படகில் பலரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இவர் போராதகாலம், இந்திய கடல்படையிடம் மாட்டிக்கொண்டார். அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள பொலிசாரிடம் உதயகலா அவரது கணவர் மேலும் 3வரை சந்தேகத்தின் பேரில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
இது இவ்வாறு இருக்க , தாம் ஈழ அகதிகள் என்றும் , ஈழத்தில் இருந்து 5,000 தமிழ் அகதிகள் இந்தியாவர காத்துக்கொண்டு இருப்பதாகவும் உதயகலா பேட்டிகொடுத்தார். இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என்று சின்னதாக ஒரு பேட்டி கொடுத்தார். அவ்வளவு தான் ... !மீடியா கவரேஜ் இவருக்கு இலகுவாக கிடைத்துவிட்டது. பொலிசார் இவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று சில ஈழ உணர்வாளர்கள் பேச ஆரம்பித்தார்கள். அதில் முக்கியமான நபர் டாக்டர் ராமதாஸ். எதற்கு பேசுகிறோம். என்னத்திற்காக பேசுகிறோம் என்று சிலருக்கு புரிவதே இல்லை. மேடையும் ஒரு மைக்கும் இருந்தால் போதும் பேசிவிடுவார்கள். ஆனால் இவரால் ஏமாற்றப்பட்ட பலர் இந்தியாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைச் செய்தார்கள். இருப்பினும் இவர் இழைத்த குற்றங்கள் அனைத்தும், இலங்கையில் நடந்தது. இந்திய மண்ணில் இவர் அதுபோன்ற குற்றங்களைச் செய்யவில்லைஎன்ற ஒரு வாதம் இருந்தது.
இவர் பக்கா 420 என்று ராமெஸ்வரப் பொலிசாருக்கு தெரிய ஆரம்பித்தது. மேலும் அதிர்வு இணையம் இவர் தொடர்பான பல தகவல்களை ராமேஸ்வரம் பொலிசாருக்கு தொலை நகல்(FAX) மூலமாக அனுப்பிவைத்தது. இவர்களுடன் கூடவே ஒரு சிங்களப் பெண்ணும் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார். இறுதியில் பொலிசார் ஒரு நல்ல முடிவை எடுத்தார்கள். இந்தியாவில் இவர் செய்த குற்றம் என்னவென்றால் , சரியான அனுமதியில்லாமல் களவாக நாட்டிற்குள் வந்தது தான். அதனை நீதிமன்றில் வழக்காக பதிவுசெய்தார்கள். இந்த வழக்கு தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. உதயகலா அவரது கணவர் மற்றும் ரெனேகா என்னும் சிங்களப் பெண் உட்பட 5வருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இக்காலம் முடிவடைந்த பின்னர் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஏமாந்த நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு வயிற்றில் பாலை வார்கும் செய்தி இதுதான் !
Geen opmerkingen:
Een reactie posten