தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

விடுதலைப் புலிகளின் தலை நோர்வேயில்! உடல் உறுப்புக்கள் ஆஸியில்: இலங்கை கடற்படையின் முன்னாள் தலைவர் அச்சம்



தமிழ் மொழி பயிற்சியை நிறைவு செய்த 126 சிங்கள பொலிஸார்: வடக்கு கிழக்கில் பணி
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 10:47.34 AM GMT ]
இலங்கை அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியில் 5 மாதங்களைக் கொண்ட தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்த 126 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று வெளியேறினர்.
இவர்களுள் 124 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 4 பெண் பொலிஸ் உத்தியோகத்தார்கள், 10 பொலிஸ் சார்ஜன்ட்கள் அடங்குவதாக மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரி பொறுப்பதிகாரி யு.அருளானந்தம் தெரிவித்தார்.
பொலிஸ் பயிற்சி கல்லூரி உதவி பணிப்பாளர் பி.ஜினதாச தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க பிரதம அதிதியாகக கலந்து கொண்டார்.
தமிழ் மொழி கற்கையை பூர்த்தி செய்த சிங்கள பொலிஸாரின் தமிழ் மொழியிலான கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பயிற்சியை நிறைவு செய்த பொலிஸார் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றவுள்ளமை குறிப்டபிடத்தக்கது.

இனவாதத்தை தூண்ட இடமில்லை: அனுர
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 11:56.02 AM GMT ]
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் இனவாதத்தினை தூண்டுவதாக அமைந்துள்ளது.
யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்திருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றார்கள் என சுட்டிக்காட்டிய அனுர,
அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்வு எனக்கூறி வந்தவரே சந்திரிக்கா பண்டாரநாயக்க, அவர் யுத்தத்தினை வழிவகுத்தார்.
அதன் பிறகு மஹிந்த அரசாங்கத்தினால் 30 ஆண்டு கால யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் இனவாதத்தினை தூண்டும் அரசாங்கங்களே தற்போது காணப்படுகின்றன என அனுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்களை வைத்து இனவாதத்தை தூண்டி அரசியல் நடத்துகின்றார்கள் தற்போதுள்ள அரசாங்கமும் அவ்வழியில் வந்ததே ஒழிய தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்வினை பெற்று தரமாட்டார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பத்தின் ஆவணம் என வடமாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையில் இனவாதத்தினை தூண்டும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எந்த அரசாங்கமாகவிருந்தாலும் இனவாதத்தை தூண்டுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கும் அறிகுறி
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 01:02.37 PM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே சித்திக் தெரிவித்துள்ளார்.
இரு வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இச்சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
2011இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு- தூத்துக்குடி இடையேயான கப்பல் சேவை, வரத்தக ரீதியான சாத்தியம் குறைவாக இருந்தமையால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் தலை நோர்வேயில்! உடல் உறுப்புக்கள் ஆஸியில்: இலங்கை கடற்படையின் முன்னாள் தலைவர் அச்சம்
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 02:03.24 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பல்வேறு வேறு நாடுகளில் கட்டியெழுப்பப்படுவதாக இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அல்-ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் உள்ள தனியார் காணியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலையொன்றைக் கட்டியெழுப்பியதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற தலைவருமான சரத் வீரசேகர தனது அச்சத்தை வெளியிட்டு உள்ளார்.
2009ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் தோல்வியுறச் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் வேறு நாடுகளில் கட்டியெழுப்பப்படுகின்றது என்று தனது கருத்துகளை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஒரு பாதம் அமெரிக்காவிலும் மற்றைய பாதம் பிரான்சிலும் இருக்கின்றது என்று பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தலை நோர்வேயிலும் ஏனைய உடல் உறுப்புக்கள் அவுஸ்திரேலியா அல்லது தென் ஆபிரிக்காவிலும் இருக்கின்றது என்றார்.
அவரது உரையானது, இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்களால் விடப்படும் அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு ஒத்ததாக அமைந்து இருந்தது.
ஆனால் வீரசேகரவின் உரைக்கு சில மாதங்களுக்கு முன்பு, அல்-ஜசீராவின் துப்பறியும் குழுவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, இலங்கை அரசாங்கம் தென் ஆபிரிக்கா விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தமையால் 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் தென்னாபிரிக்கா, இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிந்த காலத்திலும் ஐக்கிய நாடுகளின் ஒரு குழுவினர் 2014 டிசம்பர் வரை இருந்ததாக இலங்கை தரைப்படைகளின் மூத்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு உயர்மட்ட அதிகாரியின் மனைவி, போரின் கடைசி நாட்களில் நாட்டை விட்டு தென்னாபிரிக்காவிற்கு ஓடியுள்ளதோடு, தற்போதும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சாரம் பற்றிய எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் "விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாக இருக்குமெனவும் 2012ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்களை அன்றைய காலக்கட்டத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச எதிரொலித்திருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் புலம்பெயர்ந்தார்கள் என்று யார் கூறியது என அவர் எதிரொலித்தார்.
விடுதலைப்புலிகள் இன்னும் உலகம் முழுவதும் பல்வேறு குழுக்களில் பல்வேறு முறைகளில் செயல்படும் எனவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பல நாடுகளில் உள்ளதாக 2012ஆம் ஆண்டு அவர் ஒரு உரையில் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr5G.html

Geen opmerkingen:

Een reactie posten