தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

தடுத்து வைத்துள்ள தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்! யாழில் அனுரகுமார கோரிக்கை



தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் சாதாரண போராளிகள் சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய தேவை கிடையாது. என்பதனை நாம் ஒத்துக் கொள்கின்றோம். என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்தும் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். என மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் இனவாதத்தை கடந்த அரசாங்கம் பரப்பியதுடன் யுத்தத்தை செய்த புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பையும் கொடுத்திருக்கின்றது.
எனவே நாம் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்போம். சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் உள்ள தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அதனை நாம் தேசிய அரசிலும் நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம்.
இதேவேளை இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவ்வாறான முகாம்கள் தொடர்பாக நாங்கள் எவ்விதமான தகவல்களையும் நாங்கள் அறியவில்லை.
எனவே அதனை நாங்கள் அறிந்ததன் பின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவிப்போம்.
இலங்கை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக இந்த அரசாங்கத்திடம் எவ்விதமான தீர்வுகளும் கிடையாது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் பின்னதாகவே தீர்வு கிடைக்கும். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிகின்றோம்.
ஆனால் அவர் தேர்தலில் வெற்றியடையப் போவதில்லை. அவர் உள்ளுராட்சி தேர்தலிலும், கூட்டுறவுச் சங்கத் தேர்தலிலும் கூட தோல்வியடைவார்.
இந்தநிலையில், அவரை தக்கவைப்பதன் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு மக்கள் செல்வாக்கில்லாத சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் அது சாத்தியமில்லை. என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr5E.html

Geen opmerkingen:

Een reactie posten