தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்



கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு - கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? கிழக்கு முதலமைச்சர்!
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 04:10.55 PM GMT ]
கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று காலை தமது அமைச்சுகளில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
கல்வி அமைச்சராக கி.தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சராக கி.துரைராஜசிங்கமும் அவரவர் அமைச்சுகளில் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், கலையரசன், இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சுகள் உத்தியோகபூர்வமாக கடமையினையேற்றவர்கள். அதனைத் தொடர்ந்து எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
ஹக்கீம் அமைச்சரானது ஏன்? கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? ஆதாரங்களுடன் கிழக்கு முதலமைச்சர்!
கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் கூட்டமைப்பின் உறவை தடுத்ததில் பலர் பிரயத்தனம் செய்தனர். அவர்கள் யார்? விபரிக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்.
நாம் கடந்த அரசில் விரும்பி இணையவில்லை. அப்படியாயின் ஏன் இணைந்தீர்கள்? எம்மை மிரட்டினார்கள்?
மிரட்டியவர்கள் யார்? ஆதாரங்களுடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கிறார்.
வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 04:00.59 PM GMT ]
வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சிறையிட்டனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது.
இன்று காலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் ஒன்று கூடிய வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக இன்றைய தினம் இடமாற்றக் கடிதம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வடமாகாணக் கல்வி அமைச்சை வலியுறுத்தி அமைச்சின் கதவுகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சின் நுழைவாயிலை அடைத்த ஆசிரியர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டனர்.
உள்ளே கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் அகப்பட்டதோடு, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அகப்பட்டுக் கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள ஆசிரியர் ஒருவருடன் தொடர்புகொண்ட போது,
ஒரு மாகாண சபை உறுப்பினர் எமக்கு வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது தொட்டிலை ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுகின்றார் என்று கூறினார்.
இதைவிட கல்வி அமைச்சு அதிகாரிகள் விழாக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆசிரியர்கள், மாணவர்களின் விடயங்களுக்குக் கொடுப்பதில்லை என இன்னுமொரு ஆசிரியர் விசனம் தெரிவித்தார்.
இன்றும்கூட ஒரு கல்விப் பணிப்பாளரின் மணிவிழாவுக்காக கல்வி அமைச்சு அதிகாரிகள் அனைவரும் கடமை நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறினர் என்ற செய்தியும் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt1J.html

Geen opmerkingen:

Een reactie posten