கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு - கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? கிழக்கு முதலமைச்சர்!
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 04:10.55 PM GMT ]
கல்வி அமைச்சராக கி.தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சராக கி.துரைராஜசிங்கமும் அவரவர் அமைச்சுகளில் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், கலையரசன், இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சுகள் உத்தியோகபூர்வமாக கடமையினையேற்றவர்கள். அதனைத் தொடர்ந்து எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
ஹக்கீம் அமைச்சரானது ஏன்? கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? ஆதாரங்களுடன் கிழக்கு முதலமைச்சர்!
கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் கூட்டமைப்பின் உறவை தடுத்ததில் பலர் பிரயத்தனம் செய்தனர். அவர்கள் யார்? விபரிக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்.
நாம் கடந்த அரசில் விரும்பி இணையவில்லை. அப்படியாயின் ஏன் இணைந்தீர்கள்? எம்மை மிரட்டினார்கள்?
மிரட்டியவர்கள் யார்? ஆதாரங்களுடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கிறார்.
கசப்பான அனுபவங்களை தந்த கடந்த காலம்! ஆலயங்களில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட தமிழர்கள்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 04:41.48 PM GMT ]
நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி இரண்டில் “புண்ணிய கிராம நிகழ்வு“ திருமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் நாவிதன்வெளி பிரதேசசபை செயலாளர் கரன், நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெத்தினம் மற்றும் விசேட சொற்பொழிவாளராக சாம்பசிவம் குரு, இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
இந்த நாட்டிலே மதம் சார்ந்த வணக்க ஸ்தலங்கள் மதிக்கப்பட வேண்டியவையாக இருந்த போதும் அதனை கருத்தில் எடுக்காது அந்த இடங்கள் புனிதமானது என்று கருதாமல் அந்த ஆலயங்களிலிலே தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் இன்றும் எம்மனங்களில் நீங்காத வடுக்களாகவே இருந்து வருகின்றது.
இந்து மதமானது தொன்மையும் பழமையும் வாய்ந்த ஒரு மதமாகும் அவ்வாறான மதத்திலிருந்து இன்று மக்கள் வறுமையின் காரணமாக மதம் விட்டு மதம் தாவும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதற்குக்காரணம் எமது மதத்தில் மதம் சார்ந்த போதனைகள் மனிதர்களிடத்தே சென்றடைவது அரிதாகவே காணப்படுகின்றது. அவ்வாறு மதம் மாறுபவர்களை அணுகி அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வறுமையான குடும்பங்களையோ கல்வி கற்கும் மாணவர்களைப் பற்றியோ சிந்திப்பதற்கும் அவர்களது வறுமையை போக்குவதற்கும் யாரும் முன்வருவதுமில்லை. இவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களை உரிய நேரத்தில் வழங்குவதுமில்லை.
தங்களுடைய மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு தாவுகின்றவர்களை எமது அரசியல்வாதிகளும், மதப்போதகர்களும் கண்டுகொள்வதில்லை இதன்காரணமாக மேலும் மேலும், மதம் மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றது.
காலத்தால் முற்பட்ட இந்து மதத்தின் தொன்மையினை பறைசாற்ற நாயன்மார்கள் தேவாரப் பதிகங்களை பாடி இந்து மதப் பின்னணியை வெளி உலகத்திற்கு காட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கையில் திருகோணமலை, திருக்கேதீச்சரம் போன்ற ஆலயங்கள் தேவாரப்பதிகங்கள் பாடல்பெற்ற தலங்களாக மிளிர்ந்தவையும் குறிப்படத்தக்கது.
இன்று நடைபெறும் புண்ணிய கிராம நிகழ்வானது இன்று மாத்திரமல் சங்ககாலம் தொட்டே மன்னர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு வந்த ஒரு தொன்மை வாய்ந்த நிகழ்வாகும். இன்று மேற்குலகில் வாழும் எமது தமிழ் மக்கள் கூட எமது சமயத்தினை வளர்ப்பதிலும் தங்களது கலை, கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பதிலும் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றமை போற்றப்பட வேண்டியதொரு விடயமாகும்.
எனவே எதிர்காலத்தில் எமது மதம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt2B.html
எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா மறுவாழ்வு அமைப்பின் உதவி நிகழ்வில் இரா.சம்பந்தன்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 04:50.48 PM GMT ]
கடந்த புதன் கிழமை திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூர், ஈச்சிலம்பற்று, வட்டவான் கிராமத்தில் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த தமிழ் மக்களுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பிரித்தானியா சென்றுள்ளனர்.
தமிழ் மக்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்களுக்கென்று தனித்துவமான கலை, கலாச்சார, பண்பாடும் பாரம்பரியமும் உண்டு என்று தெரிவித்த அவர், எமக்கென தனித்துவ அரசியல் உண்டென்றும் கூறினார்.
இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கிய பின்னர் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மக்களுக்குரிய சில கடமைகளை முன்னெடுப்பதற்காகவே அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுத்தாகவும் அவர் கூறினார்.
கடந்த கால அரசாங்கத்தைப் போல, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போல, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரி நேர்மையானவர் என்றும் மனசாட்சியின்படி நடந்து கொள்வார் என்று தான் நம்புவதாகவும் கூட்டிக்காட்டிய சம்பந்தர், அனைத்து இன மக்களையும் சமமாக சமத்துவமாக நடத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த அடிப்படையில் அரசாங்கம் தனக்குரிய கருமங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும் எல்லாம் மாறிவிட்டது என குறிப்பிட முடியாது என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இரா.சம்பந்தன், சி. தண்டாயுதபாணி மற்றும் வட்டவான் மக்களும் இந்த நிவாரணம் வழங்க உதவிய கனடா மறுவாழ்வு அமைப்புக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபைக் கல்வி அமைச்சர் திரு.சி.தண்டாயுதபாணி, வெருகல், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு 165 குடுப்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால - நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 06:07.30 PM GMT ]
இந்நிலையில் இன்று பொலநாலவாய நாடுகளில் செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இதனை முன்னிட்டு லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (BBC)
மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ் இளையோர் அமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். முன்னைய அரசாங்கத்தின் இருந்த அதே தலைவர்களே புதிய அரசாங்கத்திலும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் இறுதியுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு உரிய விசாரணை நடத்தவும் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கும் புதிய அரசாங்கமும் தவறிவருவதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான சாம் சுதா தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னரும், இலங்கையில் தமிழர்கள் கைதுசெய்யப்படுவது நிறுத்தப்படவில்லை என்று பிபிசி தமிழோசையிடம் சாம் சுதா கூறினார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடிவு வரும் வரை புலம்பெயர் நாடுகளில் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துமாறு பல்வேறு வழிகளில் தங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.
இலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை நிராகரித்து விட்டதாகவும் சாம் சுதா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt2D.html
Geen opmerkingen:
Een reactie posten