தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

அவுஸ்திரேலியா அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கையினை மீறியுள்ளது! ஐ.நாவின் புதிய அறிக்கை!!

பொன்சேகாவின் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 01:02.28 PM GMT ]
பறிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு மீண்டும் வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
ஜயந்த கொட்டகொட வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்தார். அதனையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சரத் பொன்சேகா, தீர்ப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்ய எதிர்வரும் 27ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விஜித் மலல்கொட, எச். சீ.ஏ. மடவல ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

த.தே.கூவிற்கு நாட்டை துண்டாக்கும் எண்ணமில்லை: சஜித் பிரேமதாச
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 01:18.36 PM GMT ]
நாட்டை துண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முல்கிரியாகலவில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி குழுக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, உருவ பொம்மைகளை எரித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமென இணங்கியமையே இதற்கான காரணமாகும் என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவிலேயே தேர்தலில் வெற்றியீட்டினார் என்ற பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக ஐரோப்பாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும் அனைத்து இன சமூக மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கௌதம புத்தர் இன, மத, மொழி அல்லது வகுப்பு ரீதியில் மனிதர்கள் ஒடுக்கப்படுவதனை ஒருபோதும் அனுமதித்தில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரு சில தரப்பினர் இனவாத கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்கள் பௌத்த மதத்தை பாதுகாக்குமாறு கோருகின்றார்களே தவிர, ஏனைய இன, மத, சமூகங்களை ஒடுக்குமாறு கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt1E.html

அவுஸ்திரேலியா அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கையினை மீறியுள்ளது! ஐ.நாவின் புதிய அறிக்கை!!
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 01:37.29 PM GMT ]
அவுஸ்திரேலியா அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கையினையும் சட்டத்தையும் மீறியுள்ளதாக ஐ .நாவின் புதிய அறிக்கையில் வெளியாகியுள்ளது .
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அகதிகளை நடத்தும் விதம் சித்திரவதைகளுக்கு ஒப்பான முறையில் அமைந்திருப்பதாக உள்ளதாகவும் இது சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடாக உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியா மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட மறந்து போன சிறார்கள் எனற அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திலேயே ஐ.நாவின் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியா தனது மனித உரிமை கடமைகளில் பின்னிற்பதையே காட்டுகின்றது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுதியுள்ளதாகவும் பலதரப்பட்ட விமர்சனங்களும் எழுந்த வண்ணமும் உள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்திய இரு குடிவரவு சட்டங்களும் அகதிகளுக்கு சிறந்த சட்டங்கள் அல்ல. இதன் காரணமாக சட்ட வல்லுனர்களின் உதவிகள் எடுப்பதற்க்கான வசதிகள் தடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று நடுக்கடலில் வைத்து விசாரணை செய்வது என்பது சர்வதேச அகதிகள் சட்டத்தினை மீறும் செயலாக உள்ளது. இதன் காரணமாக இந்த சட்ட மாற்றம் அரசாங்கத்துக்கு சார்பாகவே அமைந்துள்ளது.
இந்த புதிய சட்ட மூலங்கள் அகதிகளை பொறுத்த மட்டில் மிகவும் ஆபத்தானவை என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பும் 25 சிறார்களை கைது செய்து 2 நாட்கள் சிறையில் அடைத்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது

 http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt1F.html

Geen opmerkingen:

Een reactie posten