தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

ஐநாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன: அவுஸ்திரேலிய பிரதமர்!



நினைக்காத மாற்றங்களை கொண்டுவந்த கனடாத் தமிழர்களை தலைநிமிர வைப்பேன்: பற்றிக் பிரவுண்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 02:02.46 PM GMT ]
நான் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஒன்ராறியோவின் முதல்வராகிவுடன், நிச்சயமாக தமிழினத்தை கனடாவில் ஏனைய இனங்களைப் போல, அவர்கள் பெற வேண்டிய அந்தஸ்த்தைப் பெற வைப்பேன் என பற்றிக் பிரவுண் தெரிவித்தார்.
இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
பற்றிக் பிரவுண் மேலும் தெரிவிக்கையில்,
எனக்காகச் சேர்க்கப்பட்ட 41 ஆயிரம் அங்கத்துவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழர்கள். இன்று நீங்கள் செய்த ஒரு காரியத்தால் கனடாவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் உங்களின் மீது பார்வையைத் திருப்பியுள்ளார்கள்.
கனடிய மனிதவுரிமை மையம் மற்றைய எல்லா அமைப்புக்களும் ஒண்றிணைத்து “பற்றிக்கிற்கான தமிழர்கள்” என செயலாற்ற வந்த போது இவ்வாறானதொரு வெற்றி சாத்தியம் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும்,
இன்று உங்களின் செயற்பாட்டின் வெற்றி பல மத்திய அரசியல்வாதிகளையும் உங்களைப் பற்றி ஆச்சரியமாகப் பார்க்க வைத்திருக்கிறது.
பிரதமராக விரும்புகின்ற, சட்டமன்ற முதல்வராக விரும்புகின்றவர்கள் உள்ளிட்ட மத்திய, மாகாண அரசியல்வாதிகள் உங்களைத் தேடி இனி நிச்சயம் வருவார்கள் அந்தச் சந்தர்ப்பத்தை உங்களின் இனத்தின் தேவைகளிற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததோடு,
நான் எமது கட்சி “வெல்லக்கூடிய தொகுதிகளில்” தராதரமான தகைமைகளுள்ள ஒரு தமிழரை வேட்பாளராகப் நிறுத்துவதற்கு ஆதரவு நல்குவதோடு தனது அமைச்சரவையிலும் அவர் அங்கத்துவம் வகிப்பார் என்பதை உறுதிப்படுத்துவேன் என்று தெரிவித்ததோடு,
ஒன்றாறியோவின் சேவை வழங்கு நிறுவனங்களின் இயக்குனர்சபைகளில் மற்றைய இன அங்கத்தவர்கள் பங்குபற்றுவதைப் போன்று தமிழினமும் தனது ஆட்சியில் பங்குபற்றுமெனவும், தமிழர்கள் தங்களின் கருத்துக்களை பிரதிபலிக்க தனது இந்த முயற்சிகள் வழியமைக்கும் என்பதையும் குறிப்பிட்டதோடு,
தனக்கு கனடாத் தமிழர்களிற்கான வேலைத் திட்டத்தை திறம்பட வடிவமைத்துச் திறம்படச் செயற்படுத்திக் கொடுத்த, பாபு நாகலிங்கம், சப்தன் தியாகராஜா, செல்வி.பிரவீனா, சிவா சண், நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட சகல தொண்டர்களையும், அமைப்புக்களையும் தான் நன்றியறிதலோடு கரம்பற்றிக் கொள்வதாகவும் பற்றிக் பிரவுண் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt1G.html

ஐநாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன: அவுஸ்திரேலிய பிரதமர்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 03:17.01 PM GMT ] [ பி.பி.சி ]
தஞ்சம் கோரி வருபவர்களை அவுஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்திரவதைகளுக்கான சிறப்புத் தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்திரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது.
மனுஸ் தீவுகளில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களின் நிலை குறித்து மனித உரிமைக் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், 60 நாடுகளில் சித்திரவதைகள் குறித்து சிறப்புத் தூதுவர் ஜோன் மெண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போதுமான தடுப்பு முகாம் வசதிகளை செய்யாமை, சிறார்களை தடுத்து வைத்தல், மனுஸ் தீவுகளில் வன்செயல்கள், மனித நேயமற்ற வகையிலான நடத்தைகளை தடுக்க தவறியமை ஆகியவை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt1H.html

Geen opmerkingen:

Een reactie posten