தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை



உயிர்த் தியாகம் செய்த பொலிஸாரின் 151 ஆவது நினைவு தின நிகழ்வுகள்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 05:18.55 AM GMT ]
பொலிஸ் சேவையில் உயிர்த்தியாகம் செய்த பொலிஸாரின் 151 ஆவது நினைவு தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.
அந்தவகையில், ஹற்றன் பொலிஸ் நிலையத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஹற்றன் பொலிஸ் நிலைய அதிகாரி சமன் யடவர தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் சேவையிலிருந்து உயிர்நீத்தவா்கள் மற்றும் உபாதைக்குள்ளாகியவர்கள் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் இடம்பெற்ற உயிர்த் தியாகம் செய்த பொலிசாரின் 151 நினைவு தின நிகழ்வு
உயிரிழந்த பொலிசாரை நினைவு கூறும் பொலிஸ் ரணவிரு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நினைவுத்தூபிக்கு முன்னால் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல்வாகிஸ்ஸ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க, மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார உட்பட களுவாஞ்சிக்குடி, வழைச்சேனை ஆகிய பிரதேசங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் சர்வமத தலைவர்கள், உயிரிழந்த பொலிசாரின் குடும்பத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இது வரையில் உயிரிழந்த பொலிசாரின் நினைவாக பொலிஸ் நினைவுத்தூபிக்கு மலர்வலையம் வைக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல்வாகிஸ்ஸ முதலானவர்கள் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதையடுத்து ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த பொலிசாரின் குடும்பத்தவர்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி செலுத்தினர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr1B.html

நிதி அமைச்சருக்கு எதிராக பிரதமரிடம் முறைப்பாடு!
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 05:26.14 AM GMT ]
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, காணி ஒன்றை பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக கூறி, ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முறைப்பாட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
முறைப்பாட்டை கையளித்த பின்னர், ஊடகங்களிடம் பேசிய ஜோன் பெர்ணான்டோ எந்த இந்த நபர், தனக்கு சொந்தமான காணியை அமைச்சர் பலவந்தமை கையகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து தேடிப்பார்த்து நியாயத்தை நிறைவேற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தூய்மையான நிர்வாகமே தனக்கு தேவை எனக் கூறியுள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 05:33.30 AM GMT ]
ஒரு வருடகாலமாக தடைப்பட்டிருந்த இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சென்னையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் சார்பாக மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 10 பேர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் மேற்பார்வையாளர்களாக கடற்தொழில் அமைச்சு மற்றும் கடற்தொழில் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 06 பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக 2 ஆம் சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் கடந்த வருடம் மே மாதமளவில் இடம்பெற்றிருந்தன.
முதற் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தமிழகத்தின் சென்னையில் நடைபெற்றதுடன், எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருந்தன.
மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி சென்னை நோக்கி பயணமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr1D.html

Geen opmerkingen:

Een reactie posten