தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய ரணில் தீவிர முயற்சி: டியு. குணசேகர

ரொறன்ரோ தமிழ் மகளீர் தினவிழாவில் ஐ.நா. மகளீர் விவகார தலைவி சிறப்புரை
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 02:39.41 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மகளீர் விவகாரக் கனடாக்குழுவின் தலைவி அல்மாஷ் ஜிவானி, கனடிய மனிதவுரிமைகள் மையம் நடாத்தும் சர்வதேச மகளீர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நன்பகல் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை ரொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் உள்ள ஒன்றாரியோ சட்டமன்றத்தில் இடம்பெறவுள்ள கனடிய மனிதவுரிமை மையத்தின் நிகழ்விலேயே ஐ.நாவின் கனடாவிற்கான மகளீர் விவகாரத் தலைவி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுப் விவாதங்களும் இடம்பெறும். பங்குபற்றுபவர்கள் ஒன்றாறியோ சட்டமன்றத்தை சுற்றிப் பார்வையிடுவதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதுள்ளடன், இந் நிகழ்விற்கு எந்த விதக் கட்டணங்களுமில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஆண்டாக இடம்பெறும் கனடிய மனிதவுரிமை மையத்தின் இந்த நிகழ்விற்காக பதிவு செய்தவர்களில் பலரும், பொது நிறுவனங்கள் மற்றும் அரச சார்பு நிறுவனங்கள் சார்பாக ஒன்றாரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதால் சகலருடனுமான கலந்துரையாடலிற்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.

இலங்கை மீது அமெரிக்கா நம்பிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 03:32.49 AM GMT ]
இலங்கை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அதில் முன்னேற்றங்கள் இருக்கும் என்று தாம் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்போது உறுதியளித்தப்படி இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கைகள் பிரதிபலிக்கப்படும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் உரையாற்றிய பின்னர் தமது உரையை நிகழ்த்திய அமரிக்க பிரதிநிதி,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடன் இணைந்து செல்ல இலங்கை அளித்துள்ள உறுதிமொழியை வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் செப்டம்பர் மாத அறிக்கையில் முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq3F.html

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய ரணில் தீவிர முயற்சி: டியு. குணசேகர
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 03:45.46 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
முன்னொருபோதும் இல்லாத வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ரணிலுக்கு அவசியம் எழுந்துள்ளது.
கடந்த 37 ஆண்டுகளாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நாட்டில் அமுலில் இருந்தது.
அப்போதெல்லாம் இல்லாத அவசரமும் அவசியமும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், எதிர்காலத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமருக்கும் கிடைக்கக் கூடும் என்பதனால், நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென ரணில் போராடி வருகின்றார் என டியு.குணசேகர சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq3H.html

Geen opmerkingen:

Een reactie posten