தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டமூலத்தை சு.க. எதிர்க்குமாம்!



யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 06:57.19 PM GMT ]
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்
லண்டனில் உள்ள பழையமாணவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu7G.html

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டமூலத்தை சு.க. எதிர்க்குமாம்!
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 07:05.57 PM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அவசர சட்டமூலம் எதனையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கும் என எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறைநீக்கம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் இரண்டையும் ஒன்றாகவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கம் அகியவற்றிற்கான பொருத்தமான தருணமிது.இரண்டையும் ஓன்றாக செய்வதற்கு முயற்சித்தாலே நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம்,
எனினும் ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முயல்வதாக நாங்கள் அறிகின்றோம். அதனை நாங்கள் எதிர்ப்போம். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu7H.html

Geen opmerkingen:

Een reactie posten