தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

குண்டுவெடிப்பு ! கஜன்-துமிலன் அதிரடி விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து செயற்பட்டு கொழும்பு மற்றும் கல்கிசை குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 2009 ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் ஆறுவருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டு உள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. யாழ்ப்பாணம் நீர்வேலியின் சிறுப்பிட்டி மேற்கினை சேர்ந்த குணரட்ணம் கஜேந்திரன் (கஜன்-துமிலன்) என்பவர் 2009 ம் ஆண்டினில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம் ஆட்சியில் இருந்த கோட்டபாய , தாம் பெரும் சாதனை செய்துவிட்டதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இவருக்கு எதிராக 2012ம் ஆண்டிலேயே வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் போது சந்தேக நபரால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் நீதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மேலதிக சாட்சியங்கள் இருந்தால் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதியால் அரச சட்டத்தரணிக்கு அறிவுறுத்தபபட்டது. எனினும் சந்தேக நபருக்கு எதிராக வேறுசாட்சியங்கள் இல்லையென தெரிவித்த அரச சட்டத்தரணி வழக்கை முடிவுறுத்த கோரியிருந்தார். இதனையடுத்தே சந்தேக நபர் மன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.
முதலில் கொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு பின்னர் வவுனியாவுக்கு மாற்றப்பட்டு இருந்தது. 2009ம் ஆண்டு பெரிய குண்டுவெடிப்பு சூத்திர தாரியை தாம் கைதுசெய்துவிட்டோம் என்றும் , இனி தென்னிலங்கையில் குண்டுவைக்க முடியாது என்றும் ராஜபக்ஷர்கள் கூப்பாடு போட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten