[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:20.16 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாருடைய கையில் அதிகாரம் இருந்தாலும் மக்கள் நலன் குறித்தே எமது நோக்கம் காணப்படும்.
தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்பட கூடாது என நாங்கள் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடம் கேட்டு கொள்கின்றோம்.
மதவாதம், இனவாதம், பேசுபவர்களும் பணத்தினால் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பவர்களுமே தற்போதைய தேர்தல் முறைமையில் காணப்படுகின்றார்கள்.
எதிர்காலத்தில் இந்நிலைமை மாற்றம் செய்யப்பட்டு, மக்களினதும், நாட்டினதும் அக்கறை குறித்து செயற்படுபவர்களே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.
மேலும் நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் நிலைநிறுத்தும் வகையில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அத்துரலிய தேரர் கேட்டு கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி பொது தேர்தலுக்கு செல்வது பிரச்சினையில்லை,
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலும், தேர்தல் முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதே முக்கியமானது.
மஹிந்த அரசாங்கத்தில் பாரிய குற்றச்செயல்களும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
எனினும் இனிவரும் காலங்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறாதவாரு தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை தீவிரமாக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளருக்கு விளக்கமறியல்- சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு கைது
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:45.17 PM GMT ]
சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் திலின கமதேக இன்று உத்தரவிட்டார்.
முந்தைய அரசாங்கத்தின் போது பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ஜீப் வண்டியை திருப்பி கொடுக்கவில்லை என அஹமட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜீப் வண்டியுடன் அவர், மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அரச சொத்தை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு கைது
சிறுபராயமுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ஹிக்கடுவை மில்லவி விகாரையைச் சேரந்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிக்குவிற்கு 58 வயது எனவும், பாதிக்கப்பட்ட சிறுமி 14 வயதுடையவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நல்லாட்சியும் தவறிழைக்கிறது: விதுர விக்ரமநாயக்க
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:51.23 PM GMT ]
இங்கிரியவில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியை நீக்கிவிட்டு புதிய இராணுவ தளபதியை நியமித்தது ஒழுக்காற்று குற்றச்சாட்டோ அல்லது வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ அல்ல.
பிரதம நீதியரசரை பாராளுமன்றத்தால் மாத்திரம் நீக்க முடியும் என சட்டம் இருந்தபோதிலும் அவரை தமது இஷ்டத்திற்கு நீக்கினார்கள்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கியது எங்கள் தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்நிலையில் புதிய பிரதம நீதியரசரை பிழையான முறையில் நியமித்தது ஏன்? இதுவா நல்லாட்சி? எங்கள் ஆட்சியை விட அதிகமாக தவறு செய்யும் இந்த நல்லாட்சி அவசியமா? என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 02:21.31 PM GMT ]
இது தவிர துறவு வாழ்வை மேற்கொண்டு இந்த உலகில் பற்றறுக்கும் வழிகளை திருப்பாடல்களாகப் பொழிந்தவர். பட்டினத்தடிகளின் திருப்பாடல்களைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், நிலையற்ற பொருள்களை நிலையானவை என்று ஒரு போதும் எண்ணார்.
இவ்வாறு முற்றும் துறந்த பட்டினத்தடிகள் தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்றார். இதற்குள் இருக்கக் கூடிய கதை நீங்கள் அறிந்ததே.
ஆக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுமோ இல்லையோ தன்வினை தன்னைச்சுடும் என்பது நூறு வீதம் உண்மையானது.
தன்வினை தன்னைச்சுடும் என்ற பட்டினத்தடிகளின் வாக்கும், நீ எதனால் அளக்கிறாயோ அதனால் நீ அளக்கப்படுவாய் என்ற யேசுபிரானின் போதனையும்; ஊழிற் பெருவலி முந்துறும் என்ற வள்ளுவன் வாக்கும் ஒத்த தன்மை கொண்டவை.
ஆக, தன்வினை தன்னைச்சுடும் என்ற நியதி தற்போது இலங்கையில் ஆரம்பமாயிற்று.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தடை உத்தரவு நிச்சயம் கோத்தபாயவுக்கு பயங்கரமான கடுப்பை, கோபத்தை, ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது அனைவரதும் கடமையாகும். எனவே நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கோத்தபாய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் இனிமேல் தான் வெளிப்படும். இந்தநாட்டில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார்.
அவர் நினைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என்ற நிலைமை இருந்தது. கைதிகளின் விடுதலை, படைத்தரப்பின் நில ஆக்கிரமிப்பு எனப் பாதுகாப்புத் தரப்போடு சம்பந்தப்பட்ட அத்தனை விடயங்களிலும் கோத்தபாய ராஜபக்சவின் அதிகாரமே கோலோச்சியது.
படைத்தரப்பு சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்தால்; அவர்கூட, கோத்தபாயவுடன் கதைத்துவிட்டுக் கூறுகிறேன் என்று பதில் அளித்த சம்பவங்கள் பல உண்டு.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய எப்படியெல்லாம் நடந்து கொண்டார். எத்தனையோ பேரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடுத்தார்.
தனக்கு எதிரானவர்கள் என்று யாரைக் கருதினாலும் அவர்களை ஏதோ ஒரு வகையில் சிறையில் அடைத்து வதைத்தார். இது போன்ற பல சம்பவங்களை அரங்கேற்றி மகிழ்ந்தார்.
ஆனால், இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற பதவியை கோத்தபாய இழந்துள்ளார். பதவியிழப்பு என்பதே அவர் செய்த வினைப்பயன் என்றறிவது அவசியம்.
கூடவே அவரின் அண்ணன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்து வீட்டில் இருக்கும் துன்பம் சாதாரணமானதன்று.
என் தம்பிகளால் தான் எனக்கு இக்கதி என்று அவர் நினைப்பாராயின் அக்கணமே தம்பி கோத்தபாயவின், பசிலின் பாடெல்லாம் வீணாகிப் போகும். நிலைமை இதுமட்டும் என்றில்லை. தான் செய்த வினை எந்தளவோ அந்தளவிற்கு அந்தவினை அவரைக் சுட்டெரிக்கும்.
இதைத்தான் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று உரைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6I.html
Geen opmerkingen:
Een reactie posten