தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

ஆஸியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த புகலிடக் கோரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்!

வன்னியில் 16 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து விசாரணை
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 01:37.51 PM GMT ]
16 வயது பாடசாலை மாணவி வன்னியில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள மனு என்பன இந்த சம்பவம் தொடர்பாக சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவம் பற்றிய விசாரணை செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்திட்டுள்ள சிறுவர் நல விவகார ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் அதிகார சபையின் பொலிஸ் அதிகாரி ஆகியோர் சம்பவம் குறித்து ஆராய மாங்குளம் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர்கள், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவு காரணமாக சிறுமி உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாக மருத்துவர் கூறியதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய மாணவியின் பாட்டி தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பொலிஸார் வழங்கிய அறிக்கையில் மரணம் இயற்கையான மரணம் என கூறப்பட்டிருந்தது. மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
கனகராயன்குளம் பொலிஸார் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், உடலை கொழும்புக்கு அனுப்பி முழுமையான பிரேத பரிசோதனைகளை நடத்தி, மார்ச் மாதம் 30 ஆம் திகதி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw7D.html


பயனாளிகளிடம் இந்திய வீடுகளைக் கையளித்தார் மோடி
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 02:55.30 PM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார்.
கீரிமலை கூவில் பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளையே இந்தியப் பிரதமர் கையளித்தார்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற குறித்த கிராம மக்கள், மீண்டும் 2013 ஆம் ஆண்டு தற்காலிக வீடுகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 361 குடும்பங்கள் இந்தியன் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் திருமதி கிருஷ்ணன் கிருபா தம்பதியினருக்கான வீட்டினை இந்தியப் பிரதமர் வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன் மேலும் 10 பயனாளிகளுக்கு வீட்டு உரிமங்களையும் கையளித்தார்.
இந்தநிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள், வட மாகாண சபை முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw7H.html

ஆஸியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த புகலிடக் கோரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்!
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 02:13.36 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று சுமார் 5 மணியளவில் மெல்பேர்ன் தடுப்புக் காவலில் இருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அதை தடுத்து நிறுத்தும் முகமாக மெல்பேர்ன் தமிழ் அகதி அமைப்பினரும் அகதி ஆர்வலர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போதும் அவர் எங்குள்ளார் என்பது தெரியாத நிலை இருந்ததாக அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று காலை அவர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் விமானத்திற்குள் துண்டுப்பிரசுரங்கள் பகிரப்பட்டதன் காரணமாக 2 பிரயாணிகள் விமானத்திற்குள் ஏற்படுத்திய அசம்பாவித சூழ்நிலை காரணமாக பொலிசாரை அழைத்து மீண்டும் அவரை இலங்கைக்கு பலவந்தமாக அழைத்து செல்லாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கை மிகவும் சிரமமான சூழ்நிலையிலும் பாரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளது என மெல்பேர்ன் அகதி செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை தமிழர்களை மட்டும் நாடு கடத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw7E.html

Geen opmerkingen:

Een reactie posten