தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

இன அழிப்பு தீர்மானத்தை எடுத்து ஐ.நா அதிகாரி "ஜெப்ரி பெல்ட்மனிடம்" கொடுத்தார் விக்கி !

"கோட்டபாய" என்று அழைக்கப்படும் முகாம் முல்லைத்தீவில் உள்ளதா ? விசாரணை !

[ Mar 03, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 10755 ]
கோட்டபாய என்று அழைக்கப்படும் பிரத்தியேக முகாம் ஒன்று , முல்லைத்தீவில் இயங்கிவந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பான ரீதியில் இயங்கிவந்த இந்த முகாமில் வைத்து தான் பல புலிகளை போட்டுத்தள்ளியது ராணுவம். மேலும் சித்திரவதைக் கூடமாகவும் கடத்தப்பட்டவர்களை கொண்டுவந்து அடைத்து கொலைசெய்யும் முகாமாகவும் இது செயல்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதுபோன்ற ரகசிய முகாம் ஒன்று திருகோணமலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கே வெள்ளை இன மக்கள் கூட தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் என்று பெயர் குறிப்பிட விரும்பாத முன் நாள் கைதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் தொடர்பான செய்திகளை 2013ம் ஆண்டு "அதிர்வு" இணையமே முதன் முதலாக ஆதாரத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டது. இலங்கை கடல் பரப்பில் தச்சுத் தவறி நுளைந்த ஒரு சிறிய ரக கப்பலை மடக்கிப் பிடித்த கடற்படையினர் , அதில் இருந்த 2 வெள்ளைக்காரர்களை சிறைப்பிடித்து திருகோணமலையில் உள்ள கோட்டபாய முகாமிற்கே முதலில் கொண்டுசென்றார்கள். அவர்கள் பயணித்த படகு ஆடம்பரமான படகு என்றும். அதன் பெறுமதி மில்லியன் டாலர் கணக்கில் வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை கோட்டபாய ராஜபக்ஷ பின்னர் கையகப்படுத்தியுள்ளார். இருப்பினும் அந்த 2 வெளிநாட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க இப்படி ஒரு முகாம் உள்ளதா ? என விசாரிக்குமாறு தற்போது நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
2008 இல் தெகிவளையில் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் தொடர்ச்சியாவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் 2 முஸ்லீம் இளைஞர்களும் 3 தமிழ் இளைஞர்களும் காணாமல் போய் இருந்தார்கள். இலங்கை ராணுவத்திடம் ஏதோ ஒரு டீல் வைத்திருந்த அந்த 2 முஸ்லீம் இளைஞர்களும் மறு நாள் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்கள். அதற்காக ஒரு பார்டியை அவர்கள் கொண்டாடியுள்ளார்கள். பின்னர் அவர்கள் இருவரும் தமது 3 தமிழ் நண்பர்களோடு வீடு திரும்பும்போது தான் கடத்தப்பட்டார்கள். இது குறித்த முஸ்லீம் இளைஞர்களோடு நெருக்கமாக இருந்த நபர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட ரகசிய தகவல் ஆகும். இவர்கள் இலங்கை ராணுவத்தோடு என்ன டீல் வைத்திருந்தார்கள் என்றோ இல்லை ஏன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருந்தார்கள் என்ற விடையங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/2452.html

இன அழிப்பு தீர்மானத்தை எடுத்து ஐ.நா அதிகாரி "ஜெப்ரி பெல்ட்மனிடம்" கொடுத்தார் விக்கி !

[ Mar 03, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 8310 ]
ஈழத்தில் நடந்தது இன அழிப்பே என்பதை வலியுறுத்தியும் சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளை நிறுத்தக்கோரியும் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் வடக்கு முதலமைச்சர் நேரடியாக கையளித்துள்ளார். அதே வேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என தன்னிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
நான்கு நாள்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பை சென்றடைந்த ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு சென்ற வடக்கு முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் வடக்கில் இருக்கக் கூடிய நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பில் இங்குள்ள நிலமைகளை அறியும் நோக்கிலேயே அவர்களது பயணம் அமைந்திருந்தது.
அரசியல் ரீதியிலான கேள்விகளையே எங்களிடம் தொடுத்து அது விடயத்திலேயே அறிந்து கொண்டார். அத்துடன் இந்த நேரத்தில் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணை கொண்டுவந்தமை தொடர்பில் கேட்டார். அதற்கு நான் பல காரணங்களைக் காட்டி தெளிவுபடுத்தினேன். ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை புதிய அரசுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமே. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். எனினும் ஒரு முறை மாத்திரமே பிற்போடப்பட்டுள்ளது. செப்ரெம்பரில் அறிக்கை வெளியிடப்படுவது உறுதி என தன்னிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
http://www.athirvu.com/newsdetail/2453.html

Geen opmerkingen:

Een reactie posten