இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கன்னத்தில் அறைந்துள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை சுட்டுக்கொள்ள நேரிடும் என அண்மையில் ரணில் விக்ரமசிங்க இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தானது இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள பிரதமரின் கன்னத்தில் அறைந்ததற்கு நிகரானது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நீங்கள் சுட்டால் , நாங்களும் சுடவேண்டி வரும் என்று சுஷ்மா தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இந்திய பிரதமர் விஜயம் செய்ய உள்ள நிலையில் இலங்கைப் பிரதமர் இவ்வாறான கருத்து வெளியிடுவது பொருத்தமற்ற செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், இந்தப் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமென்ற இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த விஜயத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2524.html
Geen opmerkingen:
Een reactie posten