[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:27.43 AM GMT ]
ஏதெனும் ஒர் அமைச்சு, நிறுவனம் தொடர்பில் ஊடகங்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம், நிறுவனம் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம்.
அமைச்சு, அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள் தொடர்பிலான விபரங்களை யார் வெளியிட வேண்டும், எவ்வாறு வெளியிட வேண்டும் என்பது குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
கடந்த காலங்களில் இவ்வாறு அரச அதிகாரிகள் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பில் ஒழுக்கக் கோவையொன்று தயாரிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் போன்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:49.17 AM GMT ]
கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் வகையில் சில கட்சிகள் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து சிலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் எனவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmr7I.html
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் மைத்திரி?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:00.14 AM GMT ]
இந்த தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சின் தரப்பு வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்றக்குழு மற்றும் நேஸ்பி பிரபுவின் தலைமையில் லண்டனில் இயங்கும் இலங்கை தொடர்பான நாடாளுமன்றக்குழு என்பவற்றையும் சந்திக்கவுள்ளார்.
முன்னர் மஹிந்த ராஜபக்ச லண்டன் சென்றபோதெல்லாம் தமிழ் புலம்பெயர்வாளர்களை சந்திக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmr7J.html
Geen opmerkingen:
Een reactie posten