தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜேர்மனிய உயர் அதிகாரி

இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:09.09 AM GMT ]
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 5 படகுகளை இந்திய கரையோர காவல் படையினர் நேற்று விடுவித்துள்ளனர்
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இந்தப்படகுகள் விடுவிக்கப்பட்டன.
இந்த படகுகளில் 7 இலங்கை மீனவர்கள் பயணிக்க அவர்களுக்கு இந்திய கரையோர காவல்படையினர் இலங்கை கடல் வரை பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கையின் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்தப்படகுகள் 2014 மே முதல் செப்டெம்பர் மாதப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டவையாகும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை!- இரா.சம்பந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:10.34 AM GMT ]
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் ஒருவருக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு சமீபத்தில் திருகோணமலையில் நடத்திய நான்கு நாள் விசாரணையை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சில புறக்கணித்திருந்த செயல் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தர் அந்த நிலைப்பாட்டுடன் தமக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்தார்.
இந்த ஆணைக்குழுவின் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த ஆணைக்குழுவின் விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியமளிப்பது கடமை என்று சம்பந்தர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmsyB.html

இலங்கையின் புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் பட்டியல் தயார்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:46.17 AM GMT ]
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள 27 தூதரகங்களுக்கு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான பட்டியல் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவினால், நாடாளுமன்ற உயர் பதவிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய நாடுகளுக்கான புதிய வதிவிட பிரதிநிதியாக ராஜதந்திரி கலாநிதி ரொஹான் பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.
அதேவேளை தற்போதைய வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன உள்ளிட்டோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவு அமைச்சின் முன்னாள் செயலாளர் சேனுகா செனவிரட்ன பேங்கொக்குக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது பதவியில் அமர்த்தப்பட்டிருந்த அட்மிரல் திஸ்ஸர சமரசிங்க, லக்ஷ்மன் உலகல்ல, வசந்த கரணாகொட, எயார் மார்சல் ஜெயலத் ஜெயக்கொடி உள்ளிட்டோர் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜேர்மனிய உயர் அதிகாரி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 03:26.24 AM GMT ]
ஜேர்மனியின் உயர் அதிகாரி ஒருவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மனிய தூதரகம் அறிவித்துள்ளது.
ஜேர்மனிய வெளியுறவுத்துறையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பீட்டர் பெரூகெல், எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இவ்விஜயத்தின் போது இரு தரப்பு உறவுகள் குறித்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சவார்த்தை நடத்தப்படவுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சியினர், சிவில் சமூகத்தினர், சமய தலைவர்கள் ஆகியோரையும் ஜேர்மனிய அதிகாரி சந்திக்கவுள்ளார்.
இதேவேளை ஜேர்மனிய குழுவினர் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களுக்கு சென்று படைத்தரப்பினரையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUmsyE.html

Geen opmerkingen:

Een reactie posten