தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

ரணிலின் கருத்திற்கு மகிந்த ஆச்சரியம் தெரிவிப்பு

மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:15.50 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி வந்திருப்பது இப்பொழுது வெளிவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நுகேகொடை மிரிஹான பிட்டியில் உள்ள வீட்டு பதிவு விலாசத்தில் நிறுவனம் ஒன்று நடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனம் ஜெஸ்மி கொன்சொலிடேடட் (Chesmi Consolidated (Pvt) Ltd) என்ற பதிவில் 175/2 பழைய கொட்டாவை வழி மிரிஹான என்ற விவசாயத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலாசம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் வசித்த வீட்டின் விலாசமாகும்.
மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகன் ஹிமால் லலிந்திர ஹெட்டி ஆராச்சி அவ் நிறுவனத்தின் இயக்குனராக செயற்பட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் இருந்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு கடனாக  15,773.056  ரூபாய் 2012ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு (CSN) 25,275.000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
செஸி என்ற ஸ்தாபனத்திற்கு 9,970.133.50 ரூபாயும் இன்னும் ஒரு ஸ்தாபனமான சிலிரா சொலிஸ்சன் (Celera Solution (Pvt) Ltd) 7.708.018.11 கடனாக வழங்கியிருப்பதாகவும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வியாபாரம் வடக்கு கிழக்கு மாகாணத்தை முக்கியப்படுத்தி டயலொக் உற்பத்திகளை விநியோகிக்கும் முகவராக செயல்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகை கிருஷ்ண தூதாகுமா?
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:36.09 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு வந்துள்ளார்.
நாளை யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்குமான அவரின் விஜயம் அமைந்திருக்கும். இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு, மன்னாருக்கு வருகை தருகிறார் என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இனம்புரியாத ஆர்வத்தை - அங்கலாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஈழதேசத்திற்கு பிரதமர் மோடி போகக் கூடாதென்பதே அந்த எதிர்ப்புக்குக் காரணம்.
கூடவே, இலங்கை அரசின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்திருக்க வேண்டும்.
போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் நான் இலங்கைக்கு வருவது நல்லதல்ல என்று கூறி இலங்கை விஜயத்தை மோடி நிறுத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் ஆதங்கம்.
இந்த ஆதங்கத்தில் நியாயம் இருந்தாலும் வருகின்றவர் பிரதமர் மோடி. இங்கு இருக்கின்றவர் ஜனாதிபதி மைத்திரி என்ற வகையில் ஈழத்தமிழ் மக்கள் மோடியின் வருகையை கிருஷ்ண தூதாகக் கருதுகின்றனர்.
அதாவது பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக கண்ண பரமாத்மா துரியோதனிடம் தூது செல்கிறார். தூது நோக்கம் சண்டையை நிறுத்துவது. சண்டையை நிறுத்துவது முடியாத காரியம் என்பது கிருஷ்ணனுக்கு அச்சொட்டாகத் தெரியும்.
அப்படியாயின் துரியோதனிடம் கண்ணன் தூது சென்றது எதற்காக? என்ற கேள்வி எழும். பாரதப் போர் தவிர்க்க முடியாததென்பது தெரிந்த விடயமாகினும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் தூது சென்று போரை நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் யுத்தத்தில் உறுதியாகப் போரிட முடியாது போகும். அதேநேரம் போரில் ஏற்படுகின்ற அழிவுகளை ஜீரணிப்பதற்கும் போர் தொடங்குவற்கு முன்னதாக சமாதானத் தூது அவசியம் என்ற வகையிலேயே கிருஷ்ண தூது நடந்தது.
கிருஷ்ணதூது சமாதானத்திற்காயினும் பாரத மக்கள் கிருஷ்ண தூதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தர்மம் பாதுகாக்கப்படும் என்பதே அந்த நம்பிக்கை. மக்களின் நம்பிக்கை யுத்தத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகிறது.
சமாதானம் சாத்தியமாகவில்லை எனும் போது, யுத்தத்தினூடாகவேனும் தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முடிபு அங்கு எடுக்கப்படுகின்றது.
இது போலத்தான் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயமும் அமைந்திருக்கின்றது. இலங்கைக்கு வருகை தருகின்ற பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் மன்னாருக்கும் வருகை தருகிறார்.
எனவே, தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவதில் மோடியின் இலங்கை விஜயம் பெருந்துணை புரியுமென நம்புகின்றோம். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவது மோடியின் தலையாய கடமை.
இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங்கும் இலங்கையில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்­சவும் இருந்து, மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக இருந்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழர் தாயகத்தில் நடக்கும்.
ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருபவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஏதாவது எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் நிறையவே உண்டு.
இந்த நம்பிக்கை வீண் போகாமல் இருப்பதை மோடி உறுதி செய்ய வேண்டும்.

ரணிலின் கருத்திற்கு மகிந்த ஆச்சரியம் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:28.26 AM GMT ]
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுதள்ள அனுமதியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மூத்த அரசியல்வாதி ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை எப்படி முன்வைத்திருக்க கூடும் என்பதனை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன் பிடிக்கும் பிரச்சினை தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டு தான் உள்ளது.
அதனை தடுப்பதற்கான வழி இந்திய மீனவர்களை ஊக்கமின்மைபடுத்தலே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சில வாரங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதும் அவ்வாறான ஒரு நோக்கத்துடனே.
குறித்த பிரச்சினைக்கு மீனவர்களை மாத்திரம் குற்றம் சுமத்துவது தவறென மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwyB.html

Geen opmerkingen:

Een reactie posten