தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை!

காடாய் போன கிராமமும் கண்ணீர்விட்ட வளலாய் மக்களும்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:40.27 AM GMT ]
கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த தங்களது சொந்த மண்ணை அப்பிரதேச மக்கள் இன்று பார்வையிட்டனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது.
பொது மக்கள், மிகவும் ஆர்வத்துடன் தமது வீடுகளுக்குச் செல்கின்றோம் என்ற உணர்வுடன் பார்வையிடச் சென்றனர்.
எனினும், அவர்களின் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதுடன் எல்லைகள் கூடத் தெரியாமல் அழிக்கப்பட்டு திறந்தவெளியாகவே காணப்பட்டது.
அவர்களுடைய வீடுகள் இருந்த இடத்தைக் கூட அடையாளம் காட்ட முடியாத நிலையில் பற்றைகள்,செடிகொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து காணப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தனது அலுவலக ஊழியர்கள் மூலம் உரிய பதிவுகளை மேற்கொண்டு இராணுவத்தினரின் எந்த வகையான கெடுபிடிகளும் இன்றி பொது மக்கள் தமது காணிகளுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சர்வேஸ்வரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் ஜே/284 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 236 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற அனுமதித்த நிலையில் இங்கு நிலை கொண்டு இருந்த இராணுவத்தினர் தமது முன்னரங்க காவல் நிலையத்தை தற்போது இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் வரை பின்நகர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சி?
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:54.00 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, காலி துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடம்பர படகொன்றின் மூலம் இன்று அதிகாலை 3.30 அளவில் அவர் இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோத்தபாயவுக்கு நெருக்கமான ஒருவர் படகை வழங்கியுள்ளதாக த இண்டிபென்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
காலி துறைமுகத்திற்கு அருகில் கடலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு வேகமாக படகொன்று செல்வதை கண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அது பற்றிய தகவலை கடற்படையினருக்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து படகை விரட்டிச் சென்ற கடற்படையினர் அதனை நிறுத்தியுள்ளனர். படகு உரிமையாளரின் கைபேசியை பரீட்சித்து பார்த்த போது, அவர் பிடிப்படுவதற்கு 10 வினாடிகளுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன்னரும் கோத்தபாயவுக்கு அவர் பலமுறை அழைப்பை எடுத்திருந்தார். கோத்தபாயவுடன் அவருக்கு நெருக்கமான 15 பேர் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவிருந்தாக தகவல்கள் கூறுவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.


கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை!
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 08:37.39 AM GMT ]
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மதியம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் சார்பில் ஆஜரான சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அவதானித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி,  ஜெயகணேஸ் பகீரதியை மூன்று நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.
இவரை இலங்கை அரசு கடற் புலிகளின் முக்கியஸ்தர் என குற்றஞ் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது பெண் குழந்தை சாம்ராஜூ இவ்வார ஆரம்பத்தில் பகீரதியின் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான மேலதிக விபரம் விரைவில்
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwyD.html

Geen opmerkingen:

Een reactie posten