தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

தேர்தல் முறை மாற்றம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் காரசாரமான விவாதம்



கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளராக சந்திரதாச கலப்பதி: 10 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 11:58.10 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் சந்திரதாச கலப்பதி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்துக்கான அமர்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இரா துரைரட்ணம் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகி தவிசாளர் தெரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் சந்திரதாச கலப்பதியின் பெயர் மாத்திரம் பிரேரிக்கப்பட்டதால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக அவர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமர்வு ஒத்திவைக்கப்பட்டு, சில நிமிடங்களின் பின்னர் சபை மீண்டும் புதிய தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடியதுடன் வழமையான நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளராகப் பதவி வகித்த ஆரியவதி கலப்பதி கிழக்கின் புதிய அமைச்சரவையில் காணி, வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்..சுபைர், மாகாண முன்னாள் அமைச்சர்களான விமலா வீர திசாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பத்துப் பேர் இன்றைய சபை அமர்வைப் பகிஷ்கரிப்பு செய்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo0F.html

தேர்தல் முறை மாற்றம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் காரசாரமான விவாதம்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 11:52.27 AM GMT ]
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி.சில்வா உட்பட அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர், நில அளவைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோர் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகளிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
நீண்ட நேரம் எதிரும் புதிருமான கருத்துகள் விவாதிக்கப்பட்ட போதிலும் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமல் அக்கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டும் நாளை கூடி புதிய தேர்தல் முறை குறித்து ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo0E.html

Geen opmerkingen:

Een reactie posten