தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது

புலிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் எனது பாதுகாப்பை குறைத்துள்ளது: மஹிந்த புலம்பல்- நல்ல மனிதர்கள் யார் என்று எனக்கு தெரியும்: மகிந்த
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 12:57.45 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் எனது பாதுகாப்பை குறைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதனால் பாரியளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்ழுகுவிற்கு அடிக்கடி செல்வதனை தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பிலான விசாரணைகளில் சட்டத்தரணிகள் மட்டும் ஈடுபடுத்துவதில் பயனில்லை. துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
நான் தற்போது ஓய்வில் இருக்கின்றேன். என்றாவது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்வேன் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேர்மையான நல்ல மனிதர்கள் யார் என்று எனக்கு தெரியும்: மகிந்த
நேர்மையான நல்ல மனிதர்கள் யார் என்று எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 வாதுவ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டினுள் எத்தனை பேர் நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படுகின்றார்கள் என  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்ததும் அரசாங்க அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பதனை  காணக்கூடியதாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நான் ஓய்வில் இருந்த காலங்களில் நேர்மையான நல்ல மனிதர்கள் யாரென அறிந்துக்கொள்ள கூடியதாக இருந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlrzJ.html

டுபாயில் பெருந்தொகை பணத்தை பதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 01:16.15 AM GMT ]
டுபாய் வங்கியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மீளப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்தது.
டுபாய் வங்கியொன்றில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மீளப்பெற்றதாகவும், இலங்கையில் முன்னணி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் டுபாய் வங்கியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைப்பிலிட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.
இதனை சுட்டிக் காட்டிய ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, யார் அந்த பாராளுமன்ற உறுப்பினர் என்பது சபையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.
யார் அந்த எம்.பி. என்று கூறாவிட்டால் சபையில் உள்ள சகல எம்.பிக்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறினார்.
கடந்த அரசின் செலவீனங்கள் வருமானங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வது தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சாதாரண அரச ஊழியர்கள் மற்றும் பொலிஸார் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொள்வதற்காக பெரும் பாடுபட்டு 20,000 ரூபாவை வங்கியில் வைப்பிவிட்டு விட்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையை சிறிய இலங்கைத் தீவில் இவ்வளவு பெருந் தொகை பணத்தை டுபாய் வங்கியில் கொண்டிருக்கும் நபர் யார் என்பது சபைக்குத் தெரியப்படுத்தப்படுவது அவசியம். அரசாங்கம் இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 01:34.44 AM GMT ]
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் தன்வசம் வைத்திருந்த 22 கடவுச்சீட்டுக்கள் 8 தேசிய அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr0C.html

Geen opmerkingen:

Een reactie posten